Header

Sri Lanka Army

Defender of the Nation

28th July 2020 14:28:25 Hours

சர்வதேச மனிதாபிமான சட்டம் தொடர்பாக அதிகாரிகளுக்கு விரிவுரைகள்

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் இம் மாதம் 28 – 29 ஆம் திகதிகளை உள்ளடக்கி இரு நாட்கள் சர்வதேச மனிதாபிமான சட்டம் தொடர்பான பயிற்சி பட்டறைகள் இராணுவ அதிகாரிகளுக்கு இடம்பெற்றன.

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரத்நாயக அவர்களது பரிந்துரைப்பின் பிரகாரம் 59, 64, 68 ஆவது படைப் பிரிவிற்குரிய அதிகாரிகளுக்கு இந்த பயிற்சி பட்டறைகள் இடம்பெற்றன.

இலங்கைக்கான சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் பிராந்திய ஆயுத மற்றும் பாதுகாப்பு பிரதிநிதி திரு ஜாக்ஸ் லெமே மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் திரு எல்.சி.சன்ன ஜயவர்தன போன்ற அதிகாரிகளினால் உள்நாட்டு பாதுகாப்பு கடமைகளுக்கான மனிதாபிமான சட்டம் பற்றிய விடயங்களை உள்ளடக்கி விரிவுரைகள் நடத்தப்பட்டன.

இந்த விரிவுரையின் இறுதியில் இந்த செஞ்சிலுவை சங்க அதிகாரிகளுடன் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி அவர்கள் உரையை மேற்கொண்டு பின்னர் இவர்களுக்கு நினைவுச் சின்னங்களையும் வழங்கி வைத்து கௌரவித்தார்.

இந்த பயிற்சி பட்டறையில் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பொது நிருவாக அதிகாரி பிரிகேடியர் சுகத் ரத்னாயக, 59, 64 ,68 ஆவது படைப் பிரிவிற்குரிய கட்டளை தளபதிகள், கட்டளை அதிகாரிகள் , சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் மகளிர் அதிகாரிகள் இணைந்திருந்தனர். best Running shoes brand | Nike Air Force 1 , Sneakers , Ietp STORE