Header

Sri Lanka Army

Defender of the Nation

30th July 2020 15:42:07 Hours

அதிமேதகு ஜனாதியவர்களின் அறிவுறுத்தலுக்கமைய இராணுவத்தினரால் பாடசாலை விளையாட்டு மைதானம் புனரமைப்பு

(ஊடக வெளியீடு)

ஹங்குராங்கெத்தை போரமடுல்ல மத்திய கல்லூரி மற்றும் தெரனியகல ஶ்ரீ சமன் தேசிய பாடசாலை உள்ளிட்ட பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள்,பெற்றோர்கள் மற்றும் பாடசாலை நிர்வாகத்தினால் குறித்த பாடசாலைகளில் நிலவும் தேவைபாடுகள் தொடர்பாக, அண்மையில் குறித்த பிரதேசங்களுக்கு விஜயத்தினை மேற்கொண்ட அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து,பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் வழிக்காட்டலின் கீழ், இலங்கை இராணுவத்தின் 6 ஆவது கள இலங்கை பொறியியல் படையணி மற்றும் 12 ஆவது கள இலங்கை பொறியியல் படையணியின் படையினர் தற்பொழுது விளையாட்டு மைதானங்களை மீள் நிர்மானம் செய்துகொண்டு இருக்கின்றார்கள்.

ஹங்குராங்கெத்தை பிரதேசத்தில் மாணவர்களால் கோரப்பட்ட தேவையை உறுதிப்படுத்தியஜனாதிபதி சில மணிநேரங்களுக்குப் பிறகு, அவர் நேரடியாக இராணுவத் தளபதியிடம் தொலைபேசியில் இந்த விடயம்தொடர்பாக வரிவுரைத்தார். அதனடிப்படையில் விளையாட்டு பயிற்சி நடவடிக்கைகள் தொடர்பாக மைதானத்தை மேம்படுத்துவதற்கும் மீள் நிர்மானம் செய்வதற்கும் இராணுவத்தின் உதவியைக் கோரினார்.

ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கமை இராணுவத்தினரால் 24 மணி நேரத்திற்குள் இந்த திட்டத்தை மேற்கொள்ளப்பட்டது மேலும் அதன்படி கட்ட்டபிரல் மற்றும் புல்டோசர்இயந்திரங்ளை பயன் படுத்திதரையை சமப்படுத்தினர்.தற்போது, 6 ஆவது இலங்கை பொறியியளர் படையணியின் படையினர்கள் குறித்த விளையாட்டுமைதானத்தை தேசிய விளையாட்டு மைதானமாக்கு இணையாகமாற்றுவதற்கு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஹங்குராங்கெத்தை போரமடுல்ல மத்திய கல்லூரியில், 12 ஆவது கள இலங்கை பொறியாளர்கள், பாதுகாப்புத் தளபதி மற்றும் இராணுவத் தளபதி மூலம் எட்டப்பட்ட மற்றொரு ஜனாதிபதி உத்தரவுக்கு பதிலளிக்கும் வகையில் 10 மணி நேரத்திற்குள் தெரனியகல ஶ்ரீ சமன் தேசிய பாடசாலையில் உள்ள விளையாட்டு மைதானத்தை புனரமைத்தனர்.

அதன்படி, வியாழக்கிழமை (30) மதியம் 12 ஆவது இலங்கை பொறியாளர் படையணியின் படையினர், 95% இற்கும் அதிகமான மறுசீரமைப்பை முடித்தனர், இருப்பினும் இடைப்பட்ட மழை வேலைக்கு இடையூறாக காணப்பட்டன.பொறியாளர் படையணி தளபதி வழங்கிய குறிப்பிட்ட வழிகாட்டுதல்களின் அடிப்படையில் ஏற்பாடு செய்யப்பட்ட பணிகள் ஜூலை 18 மாலை, இராணுவ தலைமையகத்திடமிருந்து பெறப்பட்ட அறிவுறுத்தல்களுக்குப் பிறகு தொடங்கப்பட்டது.

எந்தவொரு பணியையும் நாளின் எந்த நேரத்திலும் மேற்கொள்வதில் இலங்கை இராணுவம் மீண்டும் தனது வலிமையை மீண்டும் வலியுறுத்துவது இராணுவத் தளபதியின் அறிவுறுத்தலின் பேரில் அடுத்த சில நாட்களுக்குள் இரு விளையாட்டு மைதானங்களின் புனரமைப்பையும் முடிக்க எதிர்பார்க்கிறது. (முடிவடைகிறது) Running sports | Sneakers