28th July 2020 10:18:25 Hours
பாதுகாப்பு தலைமை பிரதானி மற்றும் இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களது எண்ணக்கருவிற்கமைய முன்னோக்கிய மூலோபாயத்திற்கு ஏற்ப அதன் விரும்பிய பணிகளை நிறைவேற்ற புதிய அணுகுமுறைகளைத் திட்டமிடுவதற்கான இரண்டு நாள் பயிற்சி பட்டறைகள் 57 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் இம் மாதம் 22 – 23 ஆம் திகதிகளில் இடம்பெற்றன.
இந்த பயிற்சி பட்டறையில் படைப் பிரிவுகள் மற்றும் படையணிகளின் நடுத்தர வகுப்பு அதிகாரிகளின் பகுப்பாய்வு சிந்தனை திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன் 57 ஆவது படைப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
செயலமர்வானது 6 ஆவது சிங்கப் படையணி தலைமையக கேட்போர் கூடத்தில் 572 ஆவது படைத் தலைமையம், 6 ஆவது சிங்கப் படையணி மற்றும் 14 ஆவது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியைச் சேர்ந்த அதிகாரிகளின் பங்களிப்புடன் இடம்பெற்றன.
இராணுவ அதிகாரிகளுக்கு இந்த செயலமர்வில் 571 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி பிரிகேடியர் கபில தொலஹே அவர்கள் இராணுவத்தின் முன்னோக்கி மூலோபாயத்தின் தத்துவார்த்த அம்சங்கள் மற்றும் பணி சார்ந்த விடயங்கள் தொடர்பாக விரிவுரைகளை நிகழ்த்தினார். அத்துடன் அதிகாரிகளுக்கு தங்களது சொந்த படையணிகளுக்கான ஒரு சிறந்த செயல் திட்டத்தை பெறுவதற்கான நடைமுறையில் வேலை செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது மீதியுள்ள படைப் பிரிவுகளுக்குள் செயல்முறையானது எதிர்காலத்தில் தொடரப்படவுள்ளது என்ற விடயத்தையும் வலியுறுத்தினார்.
இந்த செயலமர்வில் 57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் யாபா, 571 மற்றும் 573 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதிகள், 57 ஆவது படைப் பிரிவின் கேர்ணல் பதவிநிலை அதிகாரி இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Adidas shoes | Autres