27th July 2020 17:40:30 Hours
571 ஆவது படைத் தலைமையகத்தின் அழைப்பையேற்று திருகோணமலை மதுவரித் திணைக்களத்தின் புலனாய்வு அதிகாரியான திரு. ஏ.எம்.எஸ்.டி.பீ அத்தநாயக அவர்களால் 571 ஆவது படைத் தலைமையகத்தின் கீழுள்ள முதலாவது சிங்கப் படையணி தலைமையக கேட்போர்கூடத்தில் இராணுவத்தினருக்கு இம் மாதம் (24) ஆம் திகதி விரிவுரைகள் மேற்கொள்ளப்பட்டன.
போதைப் பொருளின் வகைகள், பாதகமான விளைவுகள், சுகாதார விளைவுகள் மற்றும் சட்டரீதியான தாக்கங்களை உள்ளடக்கி இந்த விரிவுரைகள் இடம்பெற்றன.
இந்த விரிவுரைகள் 571 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி பிரிகேடியர் கபில தொலகே அவர்களது வழிக்காட்டலின் கீழ் முதலாவது சிங்கப் படையணியின் கட்டளை அதிகாரியின் தலைமையில் தலைமையக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றன. Authentic Nike Sneakers | Nike