28th July 2020 09:18:25 Hours
‘துரு மிதுரு – நவ ரடக்’ எனும் தொணிப் பொருளின் கீழ் பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களது எண்ணக்கருவிற்கமைய 68 ஆவது படைப் பிரிவின் கீழுள்ள 681 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் இந்த பயிர் செய்கை திட்டமானது இம் மாதம் (27) ஆம் திகதி தலைமையக வளாகத்தினுள் ஆரம்பிக்கப்பட்டன.
இந்த பயிர் செய்கை திட்டமானது 68 , 681 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதிகளின் அழைப்பையேற்று முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் ஜகத் ரத்னாயக அவர்கள் வருகை தந்து இந்த பயிர் செய்கை திட்டத்தின் கீழ் முதல் தென்னை மர கன்றினை தலைமையக வாளகத்தினுள் நாட்டி வைத்து ஆரம்பித்தார். இந்த மரநடுகை திட்டத்தின் கீழ் 100 தென்ன மரக் கன்றுகளும், பழம் மற்றும் காய்கறி பயிர் செய்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இச்சந்தர்ப்பத்தில் 68 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் உபாலி ராஜபக்ஷ, 681 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி கேர்ணல் நலின் ஹெட்டியாரச்சி, இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படையினர்கள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். latest jordan Sneakers | Nike Off-White