Header

Sri Lanka Army

Defender of the Nation

28th July 2020 18:54:16 Hours

கோவிட் – 19 புதிய விடயங்கள் தொடர்பான ஒன்றுகூடல்

கோவிட் – 19 தடுப்பு செயற்பாட்டு மையத்தின் பணிக்குழு புதிய புதுப்பிப்புகளின் செயற்பாடுகள் , தேர்தல்கள் மற்றும் கலாச்சார விடயங்கள் தொடர்பாக ஒன்றுகூடல் இம் மாதம் (28) ஆம் திகதி இடம்பெற்றன.

கோவிட் – 19 மைய தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானி மற்றும் இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க மற்றும் உயரதிகாரிகளின் பங்களிப்புடன் கந்தகாட்டில் மிக சமீபத்தில் ஏற்பட்ட தனிமைப்படுத்தப்பட்டல் கண்டறிதல்கள் போன்ற விடயங்கள் ஆராயப்பட்டன.

இராணுவ தளபதியவர்கள் கந்தகாடு மற்றும் ராஜங்கனையவில் பாரிய முன்னேற்றங்கள் குறித்து தெளிவுபடுத்துகையில் அந்த சூழ்நிலைகள் இப்போது நன்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளன என்றும் மேலும் இதுபோன்ற இடங்களை இனி தனிமைப்படுத்தப்பட வேண்டிய தேவையில்லை என்று வலியுறுத்தினார்.

மேலும் இராணுவ தளபதி அவர்கள் கோவிட் – 19 தொடர்பாக கூறுகையில் இன்று (28) ஆம் திகதி காலை 23 பேர் கொரோனா தொற்று நோய்க்குள்ளாகியுள்ளதாக பதிவாகியுள்ளன. இவர்களில் சேனபுர புனர்வாழ்வு மையத்திலிருந்து 17 பேரும், அம்பாறை போர் பயிற்சி மையத்திலிருந்து (5) பேரும், விடதபல்லை தனிமைப்படுத்த மையத்திலிருந்து ஒருவரும் மொத்தமாக தற்போது கந்தகாடு புணர்வாழ்வு மையத்தில் இருந்து கொரோனா தொற்று நோய்க்குள்ளாகியவர்களின் எண்ணிக்கை 597 ஆக பதிவாகியுள்ளது.

பி.சி.ஆர் பரிசோதனைகள் மற்றும் தனிமைப்படுத்தல் முக்கியதுவம் தொடர்பாகவும் தெரிவித்தார். ஏனெனில் இது போன்ற நடவடிக்கைகளில் பாதிக்கப்பட்டவர்களின் முதலாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது தொடர்புகளை அடையாளம் காண அதிகாரிகளுக்கு உதவியுள்ளன. அத்துடன் அவை சாத்தியமான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கையாள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

போதைக்கு அடிமையாயிருந்து ஐ.டி.எச்.எல் வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றவர் கண்டு பிடிக்கப்பட்டு பிசிஆர் பரிசோதனைகளின் போது இவர் கொரோனா தொற்று நோய்க்குள்ளாகியுள்ளமை எதிர்மறையாக இருப்பதாக கண்டறியப்பட்டது என்றும் இராணுவ தளபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

ஆரம்பத்தில், லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா, நோப்கோ பணிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பிற விருந்தினர்களை வரவேற்று கூட்டத்தின் நோக்கத்தை தெரிவித்தார். மேலும் சுகாதார வழிக்காட்டுதல்கனை கடைப்பிடிக்கும் போது தொற்றுநோய் பரவுவது குறித்து தொடர்ந்து கண்காணிப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் சுட்டிக் காட்டினார். பங்கேற்பாளர்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில் சிக்கித் தவிக்கும் இலங்கை வெளிநாட்டவர்கள் 2 விமானங்களில் எமது நாட்டிற்கு வரவுள்ளனர் இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன் போது சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க, நாட்டிலிருந்து கடைசியாக கொரோனாவிற்கு நேர்மறையான நபர்கள் சுமார் 13 நாட்களுக்கு முன்பு பதிவாகியதாகவும், ராஜங்கனய பகுதிகளில் செயற்பாடுகள் இப்போது தளர்த்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். தப்பித்து சென்ற ஐ.டி.எச் நோயாளியை தொடர்பாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும் தொடர்ந்து, வரவிருக்கும் பொதுத் தேர்தல்கள் மற்றும் நடந்துகொண்டிருக்கும் கதிர்காம திருவிழா மற்றும் தலதா பெரஹெர தொடர்பான விடயங்களும் ஆராயப்பட்டன.

கோவிட் – 19 அச்சுறுத்தலால் பாதிக்கப்படாமல் பொது தேர்தல்களை நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மற்றும் உத்திகளை தேர்தல் ஆணையத்தின் பிரதிநிதி திரு சமன் ஶ்ரீ ரத்நாயக அவர்கள் சுட்டிக்காட்டினார்.

வாக்காளர்கள் வாக்களிக்கும் போது தனிப்பட்ட தொடர்புகளை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகளும் மதீப்பீடு செய்யப்படுகின்றன. Best Sneakers | Nike Shoes