Header

Sri Lanka Army

Defender of the Nation

28th July 2020 16:13:15 Hours

யாழ்ப்பாணத்தில் நல்லிணக்க மையம் திறந்து வைப்பு

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் மேற்கொண்டு வரும் நல்லிணக்க மையத்தை போல் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பூரன ஏற்பாட்டில் சிவில் சமூகத்திற்கு நன்மை ஏற்படும் முகமாக புதிய நல்லிணக்க மையமானது நிர்மானிக்கப்பட்டு இம் மாதம் (25) ஆம திகதி திறந்து வைக்கப்பட்டன.

சித்தங்கேனியில் மீள் நிர்மானிக்கப்பட்ட பழைய வீட்டில் இந்த புதிய நல்லிணக்க மையமானது இராணுவத்தினரால் நிர்மானித்து யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பூரன பங்களிப்புடன் நிர்வாகிக்கப்படவுள்ளது.

இந்த புதிய நல்லிணக்க மையமானது பல நலம் விரும்பிகள் மற்றும் மூத்த குடிமக்களின் நெருக்கமான ஒத்துழைப்புடன் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் நிர்வகிக்கப்படவுள்ளது. அத்துடன் சிவில் சமூக அபிவிருத்தி இயற்கையின் பல திட்டங்களுக்கு இடமளிக்கக்கூடிய வகையில் விளையாட்டு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் உள்நாட்டு தொழில்களை நீண்ட காலத்திற்கு மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்த மையம் இயங்கவுள்ளது.

இந்த மையமானது இம் மாதம் (25) ஆம் திகதி யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வனிகசூரிய அவர்களினால் திறந்து வைக்கப்பட்டன. இச்சந்தர்ப்பத்தில் 51 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி, 515 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி, இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் இணைந்திருந்தனர். best Running shoes brand | GOLF NIKE SHOES