27th July 2020 18:00:47 Hours
கடுவெலயில் உள்ள கொரத்தோட்டா ஸ்ரீ ஷைலராம ராஜமஹா விஹாரயின் 'தஹம் சபாவ'வின் ஶ்ரீ சோபித்த நகிமி தர்ம மந்திரிய (பிரசங்க மண்டபம்) திறப்பு விழா நிகழ்விற்கு கடுவெலயில் உள்ள கொரத்தோட்டா ஸ்ரீ ஷைலராம ராஜமஹா விஹாரயின் தலைவர் ஹபரகட சோபித நாயக தேரர், அவர்களின் அழைப்பை ஏற்று (25) ஆம் திகதி பிற்பகல் பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் கலந்து கொண்டார்.
மல்வத்தே அத்தியாயத்தின் மஹோபாத்யாய நியங்கொட தர்மகீர்த்தி ஸ்ரீ சங்கரக்கித விஜிதசிறி அனு நாயகே தேரர் அவர்கள் தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் கலந்துகொண்டு 'ஸ்ரீ சோபித நகிமி தர்ம மந்திரியாவை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து பாரம்பரிய மங்கள விளக்கு ஏற்றலுடன் (பன்சில்) நிகழ்விற்கு பிறகு, சுருக்கமான வரவேற்பு உரை மல்வத்த அத்தியாயத்தின் அனு நாயக தேரர் அவர்களால் (அனுசாசன) க்கு வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பிரசங்க மண்டபத்தின் மத சம்பிரதாய நிகழ்வுடன்,'ஹெல ஜனவஹரே செங்காவுனு பொது அருத்' (மதிப்புள்ள மறைக்கப்பட்ட புராணங்கள்) என்ற தலைப்பில் தேரர் அதுருகிரிய சுபோத தேரரால் எழுதப்பட்ட ஒரு சிறப்பு நூல் வெளியிடப்பட்டது. இப் புதிய நூல் பற்றி விவரிக்கப்பட்டு, கோயிலின் வரலாறு மற்றும் அதன் வரலாற்று முக்கியத்துவம் தொடர்பான விரிவான விவரங்கள் கலனி பல்கலைக்கழக விரிவுரையாளர் தேரர் இந்திரகரே தம்மரதன நாயகே தேரர் சிறப்புரையாற்றினார்.
இந்த நிகழ்வில் புகழ்பெற்ற அழைப்பாளர்கள் மற்றும் ஏராளமான பக்தர்களும் கலந்து கொண்டனர். Buy Kicks | Sneakers Nike