Header

Sri Lanka Army

Defender of the Nation

27th July 2020 17:15:30 Hours

ரஜரட பல்கலைக்கழக புதிய வேந்தரின் பதவியேற்பு கௌரவ நிகழ்வு

இலங்கை ரஜரட பல்கலைக்கழகத்தின் வேந்தராக மதிப்புக்குரிய ஈதல வெதுனுவே ஞானதிலக தேரர் அவர்கள் மேன்மை தங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அவர்களினால் நியமிக்கப்பட்டு இன்று (24) ஆம் திகதி இவர் இந்த பதவியை பதவியேற்கும் நிகழ்வானது இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பிரதமரின் செயலாளர் திரு காமினி செனரத், பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன , முன்னாள் இராணுவ தளபதிகளான ஜெனரல் ஜகத் ஜயசூரிய, ஜெனரல் தயா ரத்னாயக, தற்போதைய இராணுவ தளபதியும், பாதுகாப்பு தலைமை பிரதானியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா , கடற்படைத் தளபதி வயிஷ் அத்மிரால் நிஷாந்த உளுஹேதென்னே, விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ், பல்கலைக்கழக மானிய ஆணையத்தின் தவிசாளர் டொக்டர் சம்பத் அமரதுங்க, பொலிஸ் சிரேஷ்ட உயரதிகாரிகள் மற்றும் பௌத்த தேரர்கள் பங்கேற்றுக் கொண்டனர்.

இந்த புதிய வேந்தரான மதிப்புக்குரிய ஈதல வெதுனுவே ஞானதிலக தேரர் கடந்த இரண்டு தசாப்தங்களாக வடக்கில் பல பௌத்த மத திட்டங்களுக்கு பாரிய ஆதரவை வழங்கியதுடன் 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு முன்னர் போரில் ஈடுபடும் இராணுவத்தினருக்கு தலைமை வகிக்கும் இராணுவ அதிகாரியாக விளங்கினார். அத்துடன் கிளிநொச்சி மற்றும் பிற இடங்கள் மற்றும் 58 ஆவது படைப் பிரிவு தலைமையகங்களில் பயங்கரவாத ஒழிப்பின் பின்பு பௌத்த விகாரைகளை அமைக்கும் பணிகளுக்கு பாரிய ஒத்துழைப்பை வழங்கி வந்த தேரராவார்.

மேலும் வேந்தர் சமாதான கால கட்டத்தில் ஜய ஶ்ரீ மஹாபோதிய , ருவன்வெலி மஹா சேயா மற்றும் மிரிஷாவேதிய பிரசித்தி பெற்ற புராதான விகாரைகளில் பாதுகாப்பு படையினருக்காக ஆசிர்வாத சிறப்பு பூஜைகளை நிகழ்த்தினார். அத்துடன் இந்த தேரர் மே 2009 ஆம் ஆண்டிற்கு முன்னர் 58 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியாக கடமை வகித்துள்ளார்.

துருப்புக்களுக்கான மரியாதைக்குரிய துறவியின் நல்லெண்ணமும் ஆன்மீக வழிகாட்டுதலும் இன்றுவரை மரியாதைக்குரியது மற்றும் குறிப்பிடத்தக்க அம்சமாக இருந்து வருகிறது, இது அநுராதபுரவில் முதல் தாகோபா (மிரிசாவெத்தியா) இன் பிரதிநிதித்துவப்படுத்துவதால் துருப்புக்களுக்கு ஒரு தார்மீக வினையூக்கியாக விளங்குகின்றது. இவை கிமு 161-137 காலத்தில் துட்டுகெமுனுவை நினைவு கூறுகின்றது.

இந்த நிகழ்வானது இன்றைய தினம் ரஜரட பல்கலைக்கழக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன் போது புதிய வேந்தரான தேரருக்கு பிரதமரின் செயலாளர் திரு காமினி செனரத் அவர்களினால் ‘விஜினிபத்த’ பராம்பரிய தேரர்கள் பயண்படுத்தும் விசிறி நன்கொடையளிக்கப்பட்டன. அத்துடன் இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களினால் புதிய வேந்தருக்கு ‘அடபிரிஹர ‘ பௌத்த பொதியானது இந்த நிகழ்வில் நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டன.

மேலும் இந்த நிகழ்வில் இராணுவ சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சுஜீவா நெல்ஷன், பீடாதிபதிகள் மற்றும் கல்வித்துறையைச் சார்ந்த உயரதிகாரிகள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி ளகலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Best Authentic Sneakers | Nike Air Max 270