Header

Sri Lanka Army

Defender of the Nation

22nd July 2020 17:51:24 Hours

புதிய கடற்படைத் தளபதி இராணுவ தலைமையகத்திற்கு விஜயம்

ஶ்ரீ ஜயவர்தனபுரத்தில் அமைந்துள்ள இராணுவ தலைமையகத்திற்கு புதிதாய் நியமிக்கப்பட்ட 24 ஆவது கடற்படைத் தளபதியான வயிஷ் அத்மிரால் நிஷாந்த உளுஹேதென்ன அவர்கள் இன்று (21) ஆம் திகதி விஜயத்தை மேற்கொண்டு கோவிட் மைய தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானி மற்றும் இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை சந்தித்தார்.

இராணுவ தலைமையகத்திற்கு வருகை தந்த கடற்படைத் தளபதியை தலைமையக நுழைவாயிலில் வைத்து இராணுவ தலைமையகத்தின் பட்டாலியன் தலைமையக கட்டளை அதிகாரியான கேர்ணல் இந்திக பெரேரா அவர்கள் வரவேற்றார்.

பின்பு இராணுவ தலைமையகத்திற்கு வருகை தந்த கடற்படைத் தளபதியை இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சூல அபேநாயக அவர்கள் வரவேற்று பின்னர் இராணுவ சம்பிரதாய முறைப்படி இராணுவ பீரங்கிப் படையணியினரால் அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைத்து வரவேற்கப்பட்டார்.

பின்னர் இராணுவ தளபதியின் பணிமனைக்கு சென்ற கடற்படைத் தளபதியை இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வரவேற்று பின்னர் இராணுவ தலைமையகத்திலுள்ள மூத்த உயரதிகாரிகளை கடற்படைத் தளபதிக்கு அறிமுகபடுத்தி வைத்தார்.

பின்னர் கடற்படைத் தளபதி மற்றும் இராணுவ தளபதி இருவருக்கும் இடையில் நல்லுறவை மேம்படுத்தும் நோக்கத்துடன் கடந்த கால நினைவுகளை பகிரந்து கொள்ளும் நோக்கத்துடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்று இருவருக்கும் இடையில் இந்த சந்திப்பை நினைவு படுத்தும் முகமாக நினைவுச் சின்னங்கள் பரிமாறப்பட்டன.

இறுதியில் கடற்படைத் தளபதி அவர்களினால் பிரமுகர்களின் வருகையை முன்னிட்டு கையொப்பமிடும் புத்தகத்தில் கையொப்பமிட்டு தனக்கு கௌரவ மரியாதையை வழங்கி வைத்த இராணுவ தளபதி அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்தார்.

மேன்மை தங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அவர்களினால் 2020 ஆம் ஆண்டு 15 ஆம் திகதி 24 ஆவது புதிய கடற்படைத் தளபதியாக வயிஷ் அத்மிரால் நிஷாந்த உளுஹேதென்ன அவர்கள் நியமிக்கப்பட்டார்.

புதிய கடற்படைத் தளபதி 1985 ஆம் ஆண்டு 13 ஆவது பயிற்சிகெடெற் அதிகாரியாக இணைந்து திருகோணமலை கடற்படை முகாமில் அடிப்படை பயிற்சியினை பெற்றுக் கொண்டார். இந்த பயிற்சியினை வெற்றிகரமாக நிறைவு செய்ததன் பின்பு, அவர் 1987 ஆம் ஆண்டு ஜனவாரி 07 ஆம் திகதியாக இரண்டாவது லெப்டினனாக நியமிக்கப்பட்டார். பின்னர் இவர் அடுத்தடுத்த தரவரிசைகளுக்கு சீராக உயர்த்தப்பட்ட பின்னர், அவர் 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 01 ஆம் திகதி ரியர் அத்மிரல் பதவிக்கு உயர்த்தப்பட்டார்.

கடற்படைத் தளபதி அவர்கள் கொழும்பு றோயல் கல்லூரியில் தனது கல்வியை மேற்கொண்டு சிறந்த பண்புகளையும் திறமைகளையும் கொண்டு றோயல் கல்லூரிக்கு பெருமையை தேடித்தந்தவர். இவர் இருமுறை ஹேர்மன் லூஷ் கோப்பையை வென்று சிறந்த கெடற் அதிகாரியாக கல்லூரியில் விளங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கவிடயமாகும். Mysneakers | Archives des Sneakers