Header

Sri Lanka Army

Defender of the Nation

18th July 2020 19:00:51 Hours

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் மத்தியில் இராணுவ தளபதி அவர்கள் ஆற்றிய உரை

வடமாகாணத்திற்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வமான விஜயத்தை மேற்கொண்ட கோவிட் மைய தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானி மற்றும் இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் இன்று (18) ஆம் திகதி யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு விஜயத்தை மேற்கொண்டு முப்படையினர் மத்தியில் முகவரி உரையை மேற்கொண்டார். இதன் போது கோவிட் – 19 தடுப்பு சமூகசேவைத் திட்டங்கள் மற்றும் பாதுகாப்பு விடயங்கள் தொடர்பாக சிறப்புறையை மேற்கொண்டார்.

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு விஜயத்தை மேற்கொண்ட இராணுவ தளபதியை யாழ் பாதுகாப்பு படைத் தளபதி ருவன் வணிகசூரிய, வடமாகாண பிராந்திய கடற்படை கட்டளை தளபதி ரியர் அத்மிரால் எஸ்.எம்.டி.கே சமரவீர மற்றும் வடமாகாண விமானப்படை கட்டளை தளபதி குரூப் கெப்டன் ஏ.வி ஜயசேகர போன்ற அதிகாரிகள் வரவேற்று பின்னர் இராணுவ தளபதி அவர்களினால் முப்படையினருக்கு முகவரி உரையை ஆற்றப்பட்டன. இந்த உரையின் போது 2009 மே மாதத்திற்கு முன்னர் யாழ் குடா நாட்டில் எல்டிடிஈ பயங்கரவாதத்தினால் மேற்கொள்ளப்பட்ட அட்டூழியங்களுக்கு முகமளிக்கும் முகமாக முன்னாள் பாதுகாப்பு செயலாளரான கோட்டாபய ராஜபக்‌ஷ அவர்கள் முகமளித்தார் என்பதையும் குறிப்பிட்டு இந்த முகவரி உரையை எனக்கு வழங்குவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் வழங்கியிருந்த முப்படையைச் சேர்ந்த பொறுப்பான அதிகாரிகளுக்கு இத்தருணத்தில் நன்றிகளை தெரிவித்தார்.

தற்போது முப்படையினரால் கூட்டாக இணைந்து கோவிட் – 19 தடுப்பிற்கு எதிராக சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து நாட்டின் நலன்புரி நிமித்தம் அர்ப்பணிப்பான சேவைகளை மேற்கொள்கின்றனர். கடந்த காலங்களில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக முப்படையினர் இணைந்து எவ்வாறு நாம் செயற்பட்டோமோ அதனைப் போல் கோவிட் – 19 தடுப்பதற்காக நாம் ஒன்றினைந்து இந்த தேசத்திற்காக பணியாற்ற வேண்டும்.

மேலும் யாழ் குடாநாட்டில் உள்ள கடமை பாத்திரங்கள் மிகவும் முக்கியமானவை இதே போல் தற்போதைய பாதுகாப்பு செயலாளர் பாதுகாப்பு படையினரது சுபசாதனை விடயங்கள் தொடர்பாக நலன்புரிகளை மேற்கொள்கின்றார். ‘ஒற்றுமை என்பது வலிமை’ ஒரு இராணுவ வீரனுக்கு இயலாத விடயம் ஒன்றில்லை நாம் துணிச்சலுடன் செயற்படுவோம் என்று இராணுவ தளபதி அவர்கள் படையினர்களுக்கு வலியுறுத்தினார். Sports Shoes | Nike