Header

Sri Lanka Army

Defender of the Nation

18th July 2020 20:04:51 Hours

சுகாதார வசதிகள் விரிவு படுத்தப்பட்ட யாழ் இராணுவ தள வைத்தியசாலை திறந்து வைப்பு

யாழ் குடா நாட்டில் பணியாற்றும் இராணுவத்தினரது சுகாதார நலனை மேம்படுத்தும் நோக்கத்துடன் 60 படுக்கைகள் உள்ளடக்கி யாழ் வசாவிலானில் அமைந்துள்ள இராணுவ தள வைத்தியசாலையானது சகல வசதிகளுடன் விரிவு படுத்தப்பட்டன இந்த வைத்தியசாலைக்கு யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய அவர்களது அழைப்பையேற்று கோவிட் மைய தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் இன்று (18) ஆம் திகதி விஜயத்தை மேற்கொண்டார்.

நான்காவது இராணுவ மருத்துவ படையணி மற்றும் 5 ஆவது இராணுவ பொறியியல் சேவைப் படையணி ஒன்றினைந்து தொழில் நுட்ப அறிவை பயண்படுத்தி இராணுவ மருத்துவ சேவைகள் பணிப்பாளர் அவர்களது வழிக்காட்டலின் கீழ் இந்த வைத்தியசாலையின் கட்டிட நிர்மான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்து வைத்தியசாலைக்கு யாழ் பாதுகாப்பு படைத் தளபதியின் அழைப்பையேற்று இராணுவ தளபதி அவர்கள் வருகை தந்து சமய அனுஷ்டான ஆசிர்வாதங்களின் பின்பு ரிபன்களை வெட்டி திறந்து வைத்து பின்பு வைத்தியசாலை பிரிவுகளை நேரடியாக சென்று பார்வையிட்டு அங்குள்ள அதிகாரிகளுடன் உரையாடலை மேற்கொண்டார்.

இந்த வைத்தியசாலை திறந்து வைப்பதன் முதல் கட்டமாக இராணுவ தளபதி அவர்களினால் வெளி நோயாளர் பிரிவில் ஒரு நோயாளி பதிவு செய்யப்பட்டார். இந்த வைத்தியசாலையில் வெளி நோயாளர் மருத்துவ பிரிவு, அவசர பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு, ஆய்வகம், ஆவணப் பிரிவு, மருந்தகம், தனிமை வாட்டு, பெண் வாட்டு, மருத்துவ கடை, அதிகாரிகள் வாட்டு, எக்ஸ்-ரே, ஈசிஜி பிரிவு, உடல் மருத்துவத் துறை (டிபிஎம்) பிரிவு மற்றும் ஒரு பொது சுகாதார ஆய்வாளர் (பிஹெச்ஐ) பிரிவு, பல் பிரிவு, பயிற்சி பிரிவு, போன்றவைகளை இராணுவ தளபதி அவர்கள் பார்வையிட்டு இறுதியில் பிரமுகர்களின் வருகையை முன்னிட்டு கையொப்பமிடும் புத்தகத்தில் இராணுவ தளபதி அவர்கள் கையொப்பமிட்டு விடை பெற்றுச் சென்றார்.

இந்த நிகழ்வானது யாழ் பாதுகாப்பு படைத் தளபதி, 51 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகளின் பங்களிப்புடன் சமூக விலகல் மற்றும் தற்போதைய சுகாதார வழிக்காட்டுதல்களின்படி மேற்கொள்ளப்பட்டன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Adidas footwear | Nike