Header

Sri Lanka Army

Defender of the Nation

17th July 2020 19:32:44 Hours

கிளிநொச்சியில் படையினர்களின் நலன் கருதி புதிய இராணுவ தள வைத்தியசாலை திறந்து வைப்பு

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் வளாகத்தினுள் இராணுவத்தினரது சுகாதார நலன் கருதி 75 படுக்கைகள் உள்ளடக்கிய புதிய இராணுவ தள வைத்தியசாலை இன்று (17) ஆம் திகதி கோவிட் – 19 மைய தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானி மற்றும் இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களினால் திறந்து வைக்கப்பட்டன.

இந்த இராணுவ தள வைத்தியசாலையில் வெளி மருத்துவ பிரிவு, அவசர பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு, ஆய்வகம், ஆவண பிரிவு, மருந்தகம், தனிமைப்படுத்தப்பட்ட வாட்டுகள், மகளிர் வாட்டு, மருத்துவ கடை, அதிகாரிகளின் வார்ட்டுக்கள் போன்றவைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இராணுவ தளபதி அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் 4 மாத காலத்தினுள் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயந்த குணரத்ன அவர்களது தலைமையில் 11 ஆவது இராணுவ பொறியியல் சேவைப் படையணியினால் இந்த கட்டிட நிர்மான பணிகள் 26.9 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மானிக்கப்பட்டுள்ளன.

இந்த இராணுவ தள வைத்தியசாலையை திறந்து வைப்பதற்காக பிரதம அதிதியாக வருகை தந்த இராணுவ தளபதி அவர்களை நுழைவாயிலில் வைத்து இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைத்து கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதியினால் இராணுவ தளபதி அவர்கள் வரவேற்கப்பட்டார்.

பின்னர் மதசமய அனுஷ்டானங்களின் ஆசிர்வாதங்களின் பின்பு இந்த புதிய வைத்தியசாலையை இராணுவ தளபதி அவர்கள் ரிபன் வெட்டி திறந்து வைத்தார். அதன் பின்பு இராணுவ தளபதி அவர்கள் இந்த வைத்தியசாலையிலுள்ள பிரிவு சாலைகளை பார்வையிட்டு அங்குள்ள அதிகாரிகள் மற்றும் படையினருடன் உரையாடல்களையும் மேற்கொண்டார்.

இந்த இராணுவ மருத்துவமனையில் 72 பணியாளர்கள் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார். அத்துடன் தனி மருத்துவ பிரிவு, பொது சுகாதார ஆய்வாளர் பிரிவுகளை கொண்டுள்ளது. அத்துடன் இந்த வைத்தியசாலை வளாகத்தினுள் இராணுவ தளபதி அவர்கள் மரநடுகைகளும் மேற்கொண்டார்.

பின்னர் இராணுவ தளபதி அவர்கள் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையத்தில் ஸ்தாபித்திருக்கும் ‘நெலும்பியஷ’ கேட்போர் கூடத்தில் படையினர் மத்தியில் உரையை நிகழ்த்தினார்.

இந்த உரையின் போது இராணுவ தளபதி அவர்கள் மதிப்புமிக்க உயிர்களின் இழப்பில் 2009 ஆம் ஆண்டு மே மாத த்திற்கு முன்னர் எல்டிடிஈ பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து முழு கிளிநோச்சி பகுதியையும் பாதுகாக்க எங்கள் வீரம் மிக்க போர்வீரர்கள் செய்த தியாகங்களை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அத்துடன் இந்த பிரதேசத்திலிருக்கும் உள்ள மக்களின் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் நாம் சேவையாற்ற வேண்டும். மேலும் வடமாகாணத்தின் வாழ்க்கை தரங்களை மற்றும் சமூக திட்டங்களை மேம்படுத்தும் நோக்கத்திட்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்த புதிய இராணுவ மருத்துவமனையானது எமது இராணுவத்தினர் மற்றும் எமது சகோதர படையினரான விமான படையினர் நலன்புரி நிமித்தம் திறந்து வைக்கப்பட்டுள்ளன. ஆகையால் இப்போது உங்களுக்கு சுகாதார சுபசாதனை நிமித்தம் இந்த வசதிகள் வழங்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

மேலும் இராணுவ தளபதி அவர்கள் மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களின் பரிந்துரைப்பின் பிரகாரம் கோவிட் – 19 கொரோனா தொற்று நோய் குறித்து தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் பராமரிப்பது இராணுவத்தின் பொறுப்பாகும்.

"பாதுகாப்புப் படைகளின் மிகவும் ஒழுக்கமான உறுப்பினர்களாக நம்மிடையே இந்த தொற்றுநோயைப் பரப்புவதற்கு எதிராக அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் எடுப்பது நமது கடமையாகும். அதனால்தான் இராணுவத்தால் நிலைமையை அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாலும் நிர்வகிக்க முடிந்தது. வைரஸ் குறித்த இந்த விழிப்புணர்வை நீங்கள் அனைவரும் தொடர வேண்டும் என்றும், ஏற்கனவே உங்களுக்கு வழங்கப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களின்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் நான் எதிர்பார்க்கிறேன், ”என்று இராணுவ தளபதி அவர்கள் மேலும் தெரிவித்தார்.

பின்னர் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி அவர்களினால் இராணுவ தளபதிக்கு நினைவுச் சின்னமொன்று வழங்கி வைத்து கௌரவிக்கப்பட்டன. அதனை தொடர்ந்து பிரமுகர்களின் வருகையை முன்னிட்டு கையொப்பமிடும் புத்தகத்திலும் இராணுவ தளபதி அவர்கள் கையொப்பமிட்டார்.

இந்த நிகழ்வில் முன்னரங்க பாதுகாப்பு படைத் தளபதி, படைத் தளபதிகள், கட்டளை தளபதிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Sport media | Nike Shoes