Header

Sri Lanka Army

Defender of the Nation

14th July 2020 13:50:07 Hours

அரசாங்க தகவல் திணைக்களம் மற்றும் கோவிட் – 19 மையத்தினால் வெளியிடும் செய்திகளை மட்டும் நம்பவும்

நீதி அமைச்சினால் நிர்வாகிக்கப்படும் கந்தகாடு புணர்வாழ்வு மையத்தில் 532 பேர் கொரோனா தொற்று நோய்க்குள்ளாகியுள்ளதாகவும் இவர்களில் 442 பேர் புணர்வாழ்வு கைதிகள், 68 ஊழியர்கள் மற்றும் அவருடைய நண்பர்கள் 22 பேரும் உள்ளடங்குவார்கள் என்று மதியம் (15) ஆம் திகதி மதியம் 12.00 மணிக்கு கோவிட் – 19 தேசிய தடுப்பு நடவடிக்கை மையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார்.

இச்சந்தர்ப்பத்தில் கோவிட் -19 நேர்மறைக்கு இலக்கான நபர்களான கந்தகாடு புணர்வாழ்வு மையத்தைச் சேர்ந்த 09 பேரும், 4 விரிவுரையாளர்களும், ஓமானிலிருந்து வருகை தந்த இலங்கையர்கள் 4 பேரும், ஐக்கிய அராபிக் எமிரட்ஷ் 2 பேரும் முப்படையினரால் நிர்வாகித்து வரும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கோவிட் – 19 நேர்மறைகளுக்கு இலக்காகியுள்ள நபர்கள் பரிசோதனையின் பின்பு முப்படையினரால் நிர்வாகித்துவரும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும் இராணுவ பேச்சாளர் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் அரசாங்க தகவல் திணைக்களம் மற்றும் கோவிட் – 19 மையத்தினால் உத்தியோகபூர்வமாக வெளியிடும் செய்தியை மற்றும் பொது மக்கள் நம்புமாறும் போலியான வதந்திகளை கேட்டு நம்பவேண்டாம் என்று வலியுறுத்தினார்.

அறிக்கையின் வீடியோ கானொலியை இங்கு காணலாம் Nike footwear | Air Jordan Release Dates 2020