15th July 2020 12:26:35 Hours
கொவிட்-19 கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்தும் சவாலான தேசிய பணிகளையும் மீறி, ஶ்ரீ தலதா பெரஹெர திருவிழாவை முன்னிட்டு இலங்கை இராணுவமானது 6 ஆவது வருடமும் வீதி வெளிச்சத்திற்காக 5 டொன் உலர்ந்த தேங்காயான (கொப்ரா) வகைகளை வழங்கி வைத்துள்ளது.
பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் மத சம்பிரதாயங்களுக்கு மதிப்பளித்து இன்று (15) ஆம் திகதி ஶ்ரீ தலதா மாளிகைக்கு வருகை தந்து தலதா மாளிகையின் பிரதான நிர்வாகியான தியவடன நிலமே அவர்களிடம் இந்த கொப்பரா தேங்காய்களை கையளித்தார். .
குருணாகல் போயகன பகுதியில் அமைந்துள்ள விஜயபாகு காலாட் படைத் தலைமையகத்தினால் 2015 ஆம் ஆண்டு தொடக்கம் ஶ்ரீ தலதா மாளிகை திருவிழாவிற்கு இந்த கொப்பரா தேங்காய் வகைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இம்முறை விஜயபாகு காலாட் படையணியின் படைத் தளபதியும், ஆளனி நிருவாக பணியகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் சிசிர பிலபிட்டிய அவர்களினால் இந்த கொப்பரா உலர் தேங்காய்கள் வழங்கி வைக்கப்பட்டன. இவைகள் திருவிழாவிற்கு மூன்று மாதத்திற்கு முன்னரே உலரவைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தலதா மாளிகைக்கு வருகை தந்த இராணுவ தளபதியவர்களை தலதா மாளிகையின் பிரதான நிர்வாகியான தியவடன நிலம்மே அவர்கள் வரவேற்றார். பின்னர் கொரோனா வைரசிற்கு எதிராக முகமளிக்கும் முப்படையைச் சேர்ந்த படை வீரர்களுக்கு ஆசிர்வாதம் ஏற்படும் வகையில் சிறப்பு பூஜைகள் இடம்பெற்றன.
இந்த சமய நிகழ்வின் நிறைவில் இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் ஊடக நேர்காணலுக்கு முகமளித்தார். அதன் போது ஊடகத்தினால் பொது தேர்தல் கடமைகளில் இராணுவத்தினர் ஈடுபடுவார்களா என்று இராணுவ தளபதியிடம் கேள்வி எழுப்பப்பட்டது அதன் போது இராணுவ தளபதியவர்கள் பொலிஸ் திணைக்களத்தினால் பொது தேர்தல் கடமைகளுக்கு இராணுவத்தினருக்கு அழைப்பு விடுத்தால் மட்டும் இராணுவத்தினர் தேர்தல் கடமைகளில் ஈடுபடுவரென்று இராணுவ தளபதி ஊடகத்திற்கு தெரிவித்தார்.
இந்த மத சமய நிகழ்விற்கு 11 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜாலிய சேனாரத்ன, விஜயபாகு காலாட் படையணியின் படைத் தளபதியும், ஆளனி நிருவாக பணியகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் சிசிர பிலபிடிய, இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படையினர் இணைந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். latest Nike Sneakers | Nike Air Zoom Pegasus 38 Colorways + Release Dates , Fitforhealth