Header

Sri Lanka Army

Defender of the Nation

14th July 2020 17:41:48 Hours

யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாக கொண்ட ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் 108 நாள் ஆன்மீக விரதம்

இலங்கையில் கோவிட் -19 பரிமாற்றத்திற்கு எதிராக போராடும் பாதுகாப்புப் படையினர் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு ஆசீர்வாதம் அளிக்கும் முகமாக 108 நாள் நீடித்த 'வேண்டுதல் விரதத்தை நிறைவு செய்து தமது தலை முடியை வெட்டி தாடியை சவரம் செய்ததன் பின்பு இம் மாதம் (12) ஆம் திகதி யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய அவர்களை யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.

கொவிட் – 19 வைரஸை ஒழிப்பதற்காக தெய்வீக ஆசிர்வாதங்கள் கிடைக்கப் பெறுவதற்காக ஆன்மிக விரதத்தை கடைப்பிடித்த கரவெட்டி பகுதியில் வசித்து வந்த (81) வயதான ஓய்வு பெற்ற இராணுவ சிப்பாயான சின்னதம்பி நடராசா அவர்கள் கொவிட் – 19 தேசிய தடுப்பு நடவடிக்கை செயல்பாட்டு மையத்தின் தலைவரான இராணுவ தளபதி, முப்படையினர், சுகாதார அதிகாரிகள் மற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் நல்லாசி ஏற்படும் முகமாக இந்த ஆன்மிக விரதத்தை மேற்கொண்டார்.

இம் மாதம் (12) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை ஆன்மிக விரதத்தை நிறைவு செய்து யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த முன்னாள் இராணுவ சிப்பாயான சின்னத்தம்பி நடராசா அவர்களை யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய அவர்கள் வரவேற்றார். பின்பு இவருடன் உரையாடலை மேற்கொண்டார். இதன் போது யாழ் படைத் தளபதி இவரது அர்ப்பணிப்பான ஆன்மிக உறுதிப்பாட்டை முன்னிட்டு வாழத்துக்களை தெரிவித்து இவருடன் புகைப்படத்திலும் இணைந்து கொண்டார்.

108 நீண்ட நாட்கள் காலமாக இந்து மதம் மற்றும் யோகாவில் ஒரு புனித எண்ணாகக் கருதப்படுகிறது, மேலும் சூரியன், சந்திரன் மற்றும் பூமியையும் இணைக்கிறது, சூரியனுக்கும் சந்திரனுக்கும் பூமியின் சராசரி தூரம் அந்தந்த விட்டம் 108 மடங்கு என்று கருதி, அதன் மூலம் அது இருக்க வேண்டும் பழங்காலத்திலிருந்து சடங்கு முக்கியத்துவம் அதன் பிரகாரம் இவர் 108 நாட்கள் இவர் இந்த ஆன்மிக விரதத்தை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Sport media | Buy online Sneaker for Men