Header

Sri Lanka Army

Defender of the Nation

14th July 2020 18:33:15 Hours

ஓய்வு பெற்றுச் செல்லும் கடற்படைத் தளபதிக்கு இராணுவ தளபதி வாழ்த்துக்கள்

ஓய்வு பெற்றுச் செல்லும் கடற்படைத் தளபதியான அத்மிரால் பியல் டி சில்வா அவர்கள் ஶ்ரீ ஜயவர்தனபுரத்தில் அமைந்துள்ள இராணுவ தலைமையகத்தில் இன்று பகல் (14) ஆம் திகதி பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை சந்தித்தார்.

இலங்கை கடற்படையிலிருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் 23 ஆவது கடற்படைத் தளபதியான அத்மிரால் பியல் டி சில்வா அவர்கள் இராணுவ தலைமையகத்திற்கு வருகை தந்தார். இவரை தலைமையக நுழைவாயிலில் வைத்து இராணுவத்தினரால் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைத்து வரவேற்கப்பட்டார். பின்னர் நாட்டின் மிக முக்கியமான காலகட்டத்தில் கடற்படையினரை சரியான திசையை நோக்கி பயணித்த கடற்படைத் தளபதியை இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் இத்தருணத்தில் மனப்பூர்வமாக வரவேற்றார்.

பின்னர் இராணுவ தளபதி அவர்கள் இராணுவ தலைமையகத்திற்கு வருகை தந்த கடற்படைத் தளபதிக்கு தலைமையகத்திலுள்ள பிரதான தலைமை அதிகாரிகளை அறிமுகப்படுத்தினார். பின்பு இந்த மூத்த அதிகாரிகள் மற்றும் இராணுவ தளபதி கடற்படைத் தளபதியுடன் குழுப்புகைப் படத்தில் இணைந்து கொண்டு இறுதியில் கடற்படைத் தளபதிக்கு நினைவுச் சின்னமொன்றையும் இராணுவ தளபதி வழங்கி வைத்து கௌரவித்தார்.

இராணுவ தளபதி பணிமனையில் கடற்படைத் தளபதி மற்றும் இராணுவ தளபதி அவர்களுக்கு இடையில் சந்திப்பொன்றும் இடம்பெற்றது. இதன்போது கடற்படைத் தளபதி ஆற்றிய பாரம்பரிய சேவையை கௌரவித்து இராணுவ தளபதி அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தார். பின்னர் கடற்படைத் தளபதியினால் கொவிட் – 19 தேசிய தடுப்பு நடவடிக்கை மையத்தின் தலைவரான இராணுவ தளபதி அவர்களின் வழிக்காட்டலின் கீழ் இரவு பகல் ஆற்றிய சேவைகளை கெளரவித்து இராணுவ தளபதிக்கு பாராட்டுக்களை தெரிவித்தார்.

இலங்கையின் முதல் கடல்சார் கோட்பாட்டை கேப்ஸ்டோன் செய்தல், காலி மற்றும் திருகோணமலையில் முதன்முதலில் நீருக்கடியில் அருங்காட்சியகங்கள் மற்றும் டைவிங் தளங்களை நிறுவுதல், தரையிறங்கும் கைவினைப் பயன்பாட்டின் கட்டுமானம் மற்றும் 20 மீட்டர் நீளமான ரோந்து படகுகள் கடற்படையில் போன்ற குறிப்பிடத்தக்க சாதனைகளை கடற்படைத் தளபதி அவர்கள் அர்ப்பணிப்புடன் மேற்கொண்டுள்ளார் என்று இராணுவ தளபதி அவர்கள் கடற்படைத் தளபதியை மேலும் பாராட்டினார்.

இறுதியில் கடற்படைத் தளபதி அவர்கள் பிரமுகர்களின் வருகையை முன்னிட்டு கையொப்பமிடும் புத்தகத்தில் கையொப்பமிட்டு விடைபெற்றுச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Nike footwear | Air Jordan 5 Raging Bull Toro Brovo 2021 DD0587-600 Release Date Info , Iicf