Header

Sri Lanka Army

Defender of the Nation

13th July 2020 21:21:35 Hours

நொப்கோ பணிக்குழுவினர் கொவிட் – 19 தொடர்பான புதிய முன்னேற்றங்கள் குறித்து நிபுணர்களுடன் கலந்துரையாடல்

கொவிட் – 19 தேசிய தடுப்பு நடவடிக்கை செயல்பாட்டு மைய பணிக்குழுவினரின் மற்றுமொரு ஊடக சந்திப்பானது, இன்று (13) ஆம் திகதி மதியம், கொவிட் – 19 தேசிய தடுப்பு நடவடிக்கை செயல்பாட்டு மையத்தின் தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானி மற்றும் இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க அவர்களின் தலைமையில் இடம் பெற்றது. இந்த சந்திப்பில் சில நிபுணர்கள் உட்பட பிற பங்குதாரர்களும் கலந்து கொண்டனர்.

லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள், கொவிட் – 19 தேசிய தடுப்பு நடவடிக்கை செயல்பாட்டு மைய பணிக்குழுவினர்கள் மற்றும் விருந்தினர்களை வரவேற்றதுடன், புதுப்பிப்புகள், புதிய கிளஸ்டர்கள் மற்றும் நாட்டில் கொரோனா தொற்றுநோயின் தற்போதைய நிலை ஆகியவற்றை மீண்டும் மீள்பார்வை செய்வதே இந்த சந்திப்பின் நோக்கம் என்று கூறினார். பி.சி.ஆர் சோதனைகள், தனிமைப்படுத்தல் மையங்கள், வெளிநாட்டினரின் வருகை, உறவினர்களின் தனிமைப்படுத்தல் பணிகள், கண்டகாட்டில் தற்போதைய முன்னேற்றங்கள் மற்றும் சமூகத்தில் பொதுமக்களின் நல்வாழ்வு மற்றும் மேலும் இந்த நோய் தொற்று பரவாமல் தடுக்க இன்னும் செயல்படுத்தப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அவர் மேலும் கருத்து தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் வெளிநாட்டினரை முறையான மூலோபாயத்துடன் தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்புவது தொடர்பாக விவாதிக்கப்பட்டதோடு, தொற்றுநோயானது மேலும் பரவுதலை அனுமதிக்காமல், வைரஸின் கட்டுப்பாட்டை அனைத்து பங்குதாரர்களினாலும் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு வருகின்றன.பின்னர், பணிக்குழுவினரில் உள்ள வல்லுநர்கள், பிராந்தியத்திலும் பிற இடங்களிலும் ஏற்பட்ட முன்னேற்றங்களுக்கு இணையாக தொற்றுநோயின் பல்வேறு அம்சங்களைப் பற்றிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

சமூகத்தில் மேற்கொள்ளப்ப்படும் பி.சி.ஆர் பரிசோதனைகளின் வீதம் குறித்து திருப்தி தெரிவித்த டொக்டர் அனுருத்த பதேனிய அவர்கள் பரிசோதனைகளை மேலும் அதிகரித்தல் மற்றும் குறைந்த நேரத்தில் முடிவுகளை பெற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார், உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைக்கமைய வெவ்வேறு சமூக-கலாச்சார சூழல்களைக் கருத்தில் கொண்டு ,பிராந்தியரீதியிலான தடுப்பு நடவடிக்கையின் சாத்தியக்கூறுகள் தொடர்பாகவும் விவாதங்களில் ஆராயப்பட்டன. Sportswear Design | Nike Air Max 97 GS Easter Egg 921826-016 , Fitforhealth