13th July 2020 21:08:49 Hours
கொவிட் – 19 தேசிய தடுப்பு நடவடிக்கை செயல்பாட்டு மையத்தில் இன்று மதியம் 13 ஆம் திகதி இடம் பெற்ற ஊடக சந்திப்பில், கொவிட் – 19 தேசிய தடுப்பு நடவடிக்கை செயல்பாட்டு மையத்தின் தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானி மற்றும் இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க ஆகியோர் கலந்து கொண்டனர்.
"பி.சி.ஆர் சோதனைகளின் முடிவுகளின் படி, நீதி அமைச்சின் கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் இருந்து 492 பேர் கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அந்த 492 பேர் கொரோனா தொற்றாளர்கள் என்று கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் உறுதி செய்யப்பட்டுள்ளது, மொத்தம் 429 பேர் கீழ் கைதிகள், 47 ஊழியர்கள் மற்றும் மீதமுள்ள 16 பேர் ராஜங்கனை பிரதேசத்தை சேரந்த நெருங்கிய தொடர்புள்ளவர்கள் ”என்று இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா விளக்கமளித்தார்.
"கொரோனா வைரஸ் தொற்றாலர்களை கண்டறிவது தொடர்பாக ரத்னபுர போன்ற நகரங்களிலிருந்து வெளிவரும் சில கதைகள் உண்மையல்ல, உண்மையில்,அவர்கள் அனைவரும் கண்டகாடு மறுவாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தங்கள் உறவினர்களையும் நண்பர்களையும் சந்தித்தவர்கள், ஆனால் அவர்கள் சில பகுதிகளில் கூறப்படுவது போல் கொரோனா வைரஸ் தொற்றாலர்கள் அல்ல. கண்டகாட்டுக்கு வருகை தந்த அந்த தொடர்புகள் குறித்து அந்தந்த பகுதிகளில் உள்ள சுகாதார அதிகாரிகள் மற்றும் பி.எச்.ஐ.க்களுக்கு அறிவிக்கப்பட்டதும், அவர்களை அவர்கள் வசிக்கும் இடங்களில் சுய தனிமைப்படுத்தலில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, இது சில நேரங்களில் ஒரு கொரோனா வைரஸ் தொற்று நோயாளியைக் கண்டறிவது என தவறாக விளக்கப்படுகிறது, என்று "அவர் விரிவாக கூறினார்.
"குறித்த கொரோனா தொற்றாலர்களின் அனைத்து விவரங்களையும் ஜனாதிபதி அலுவலகம் மூலமாகவும், அரசாங்க தகவல் துறை மூலமாகவும் முந்தைய மாதங்களில் நாங்கள் செய்து வருவதால் நாங்கள் மறைக்க எதுவும் இல்லை. நாங்கள் தொடர்ந்து அவ்வாறு செயற்படுவோம், ”என்று நொப்கோ தலைவர் தெரிவித்தார். Running sports | New Releases Nike