Header

Sri Lanka Army

Defender of the Nation

12th July 2020 08:11:46 Hours

கண்டகாடுவில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர் 490 ஆக உயர்வு கொவிட் மைய தலைவர் தெரிவிப்பு

கொவிட் – 19 தேசிய தடுப்பு நடவடிக்கை செயல்பாட்டு மையத்தினால் இம் மாதம் (12) ஆம் திகதி ஊடக சந்திப்பில் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு நீதி அமைச்சினால் நிர்வாகித்து வரும் கண்டகாடு புணர்வாழ்வு மையத்தில் உள்ள 94 பேர் மேலும் கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளனர் என்று ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளனர். இந்த புணர்வாழ்வு மையத்திலிருந்த 829 நபர்களில் 429 பேர் கொரோனா தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளதுடன் இன்று 12 ஆம் திகதி இந்த புணர்வாழ்வு மையத்திலுள்ள 312 பேரில் 47 பேர்கள் கொரோனா தொற்று நோய்க்குள்ளாகியுள்ளனரென்று உறுதி செய்யப்படுத்தப்பட்டுள்ளனர்.

அதேபோல் இந்த கொரோனா தொற்று நோய்க்குள்ளாகியுள்ள நபர்களின் 14 குடும்பத்தவர்கள் மற்றும் நண்பர்கள் 490 பேர் கொரோனா தொற்று நோய்க்குள்ளாகியுள்ளனரென்பது ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளன.

இன்று காலை (12) ஆம் திகதி ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து 4 பேரும், குவைத்திலிருந்து ஒருவரும், அத்துடன் QR 668 விமானத்தின் மூலம் 12 பயணிகளும், மாலைதீவிலிருந்த யூஎல் 102 விமானத்தின் 6 பேரும் வருகை தந்தனர். இவர்கள் அனைவரும் முப்படையினரால் நிர்வாகித்து வரும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் குளியாபிடிய ருவல்ல ரிஷோட்டிலிருந்து இருவரும், நுரைச்சோலை தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலிருந்து 243 பேரும், அம்பாறையிலிருந்து 47 பேரும், பம்பைமடு தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலிருந்து 29 பேரும், பூசா தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலிருந்து 3 பேரும், வீடுகளிலிருந்த 324 பேரும் தனிமைப்படுத்தப்பட்டலின் பின்பு பிசிஆர் பரிசோதனைகளின் பின்பு சுகாதார சான்றிதழ்களுடனும் விடுவிக்கப்பட்டனர். அத்துடன் இதுவரைக்கும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலிருந்து 21,655 பேர் தனிமைப்படுத்தலின் பின்பு விடுவிக்கப்பட்டதுடன் தற்பொழுது நாடாளவியல் ரீதியாக முப்படையினரால் நிர்வாகித்து வரும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் 6,483 நபர்கள் தங்க வைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கடற்படையில் கொரோனா தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ள 906 பேரில் 895 பேர் பூரண குணமடைந்து இன்று (12) ஆம் திகதி தங்கள் கடமைகளுக்கு திரும்பியுள்ளதுடன், மேலும் 11 கடற்படையினர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். (நிறைவு) Best Authentic Sneakers | Nike News