10th July 2020 18:40:20 Hours
கொவிட் – 19 தேசிய தடுப்பு நடவடிக்கை செயல்பாட்டு மையத்தின் தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானி மற்றும் இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் பொது மக்கள் மேலும் எச்சரிக்கையுடன் கவனமாக இருக்கவும் என்று சமூகத்திற்கு வைரஸ் பரவுவதை தவிர்ப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்பட்டுள்ளன எனவும் ஆகையால் தவறான வதந்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என்று கருத்து தெரிவித்தார்.
பொலன்னருவை மாவட்டத்தில் அமைந்துள்ள கண்டகாடு மற்றும் சேனபுர பகுதிகளில் நீதி அமைச்சினால் இந்த புணர்வாழ்வு மறுவாழ்வு மையங்கள் நிர்வாகிக்கப்படுகின்றன. இதில் மொத்தமாக 1150 கைதிகள் தங்க வைக்கப்பட்டு புணர்வாழ்வு அளித்து வரப்படுகின்றனர். இங்கிருந்த கைதியொருவர் இம் மாதம் (7) ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலையில் பிசிஆர் பரிசோதனைகளின் போது கொவிட் வைரஸ் தொற்று நோய்க்குள்ளாகியுள்ளார் என்பது ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது. இதன் பின்பு வெலிகடை சிறைச்சாலையில் சுமார் 700 பேர் பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொண்ட போது இவர்களுக்கு கொரோனா தொற்று நோய் இல்லையென பரிசோதனைகளின் மூலம் ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளனஅத்துடன் அன்றைய தினம் கண்டகாடு புணர்வாழ்வு மையத்தில் பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொண்ட போது 57 பேர் கொரோனா தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளனர் என்று ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் மாரவில பகுதியில் கண்டகாடு புணர்வாழ்வு மையத்தில் பணி புரியும் பெண் விரிவுரையாளர் ஒருவர் கொரோனா தொற்று நோயக்குள்ளாகியுள்ளமை சுகாதார பரிசோதனைகளின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளன. அத்துடன் இவரது பெற்றோர்கள் தனிமைப்படுத்தபட்டுள்ளனர் என்று இராணுவ தளபதி அவர்கள் மேலும் தெரிவித்தார்.
இரு மையங்களிருந்த நபர்களில் இன்று 10 ஆம் திகதி மேற்கொண்ட பரிசோதனைகளின் பிரகாரம் 196 கொரோனா தொற்று நோயாளர்கள் உள்ளரென இணங்காணப்பட்டதுடன் மொத்தமாக இந்த மையத்திலிருந்து 253 நபர்கள் இணங்காணப்பட்டதையடுத்து மேன்மை தங்கிய ஜனாதிபதி மற்றும் கௌரவ பிரதமர் அவர்களது வேண்டுகோளின் பிரகாரம் இந்த மையங்கள் வைத்தியசாலையாக மாற்றப்பட்டுள்ளன. அத்துடன் இந்த புணர்வாழ்வு மையங்களிலிருந்த கைதிகளை பார்வையிட இம் மாதம் 4 ஆம் திகதி சென்ற 116 பேர் இணங்காணப்பட்டு இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஆகையால் இந்த கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமின்மையால் சமுதாயத்திற்கு வைரஸ் பரவும் சாத்தியகூறுகள் இல்லையெனவும் இந்த மையத்தில் உள்ள 8 பயிற்றுனர்கள் தாமதமின்றி அழைத்து வரப்பட்டு சுகாதார பரிசோதனைகளின் பின்பு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று இராணுவ தளபதி மேலும் தெரிவித்தார்.
சுகாதார முன்னெச்சரிக்கைகளை பொருட்படுத்தாமல் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்புவதால் பொது மக்கள் எச்சரிக்கையாக செயற்பட வேண்டும் என்றும் தகவல் திணைக்களம், கொவிட் – 19 மையம் மற்றும் ஜனாதிபதி ஊடக பிரிவினால் வழங்கப்படும் செய்திகளை மற்றும் பொது மக்கள் நம்பவும் இதற்கு புரமாக வெளியிடும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று இராணுவ தளபதி அவர்கள் வலியுறுத்தினார். (நிறைவு) Sports brands | 『アディダス』に分類された記事一覧