Header

Sri Lanka Army

Defender of the Nation

04th July 2020 16:13:13 Hours

கிழக்கு படையினரால் கைவிடப்பட்ட பாடசாலை வளாகங்களில் சிரமதான பணிகள் முன்னெடுப்பு

23 ஆவது படைப் பிரிவின் கீழுள்ள 231 ஆவது படைத் தலைமையகத்தின் பூரன ஏற்பாட்டில் 4 ஆவது கெமுனு காலாட் படையணி, 11 ஆவது சிங்கப்படையணி மற்றும் 6 ஆவது கஜபா படையணியின் பங்களிப்புடன் வெல்லவடிய சிங்கள மகா வித்தியாலயத்தியாலயம், கல்குடா ஶ்ரீ சீலங்கார முன்பள்ளி வளாகத்தில் சிரமதான பணிகள் இம் மாதம் (1) ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டன.

வெள்ளவாடிய பிரிவேன சிங்கள மகா வித்யாலயா இதற்கு முன்னர் இந்த வளாகத்தில் இருந்தது, ஆனால் மாணவர்கள் இல்லாததால் பள்ளி சுமார் 10 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்தது. அஸ்கிரிய அத்தியாயத்தின் வென் நரம்பனவே ஆனந்த நாயக தேரோவின் ஆதரவுடன் திம்புலகல விகாரையின் மதிப்புக்குரிய திம்புலகல தேவலங்கரா தேரரின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டன.

தேரரது முயற்சியின் நிமித்தம் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பூரன ஏற்பாட்டில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார அவர்களது வழிக்காட்டலின் கீழ் 23 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் தம்மிக ஜயசுந்தர அவர்களது தலைமையில் 231 ஆவது படைத் தலைமையகத்தின் படையினரது பங்களிப்புடன் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இம் மாதம் புதன் கிழமை (1) ஆம் திகதி இந்த பிரிவேன சிங்கள மகா வித்யாலயாலய திறப்பு விழாவிற்கு கிழக்கு மாகாண ஆளுநர் திருமதி அனுராதா யகம்பத் அவர்கள் பிரதம அதிதியாக வருகை தந்து திறந்து வைத்தார். மதிப்புக்குரிய திம்புலாஹல தேவலங்கார தேரர் அவர்களது வழிக்காட்டலின் கீழ் இடம்பெற்றன. இதன் போது தேரர் அவர்கள் இராணுவத்தினர் ஆற்றிய சேவையை கௌரவித்து நன்றிகளை தெரிவித்தார்.

மேலும் இந்த நிகழ்வில் 23 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் தம்மிக ஜயசுந்தர, 58 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்ணாண்டோ, 231 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி கேர்ணல் ஜானக பல்லேகும்புர போன்றோர் இணைந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Running sneakers | Nike Off-White