Header

Sri Lanka Army

Defender of the Nation

26th June 2020 17:00:51 Hours

ஓய்வு பெறும் மேஜர் ஜெனரல் தேசபிரிய குனவர்தன இராணுவ தளபதியை சந்திப்பு

கெமுனு ஹேவா படையணியின் பெருமைமிக்க படையினரில் ஒருவரும் இராணுவ தலைமையக கலாட் படை பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமான மேஜர் ஜெனரல் தேசபிரிய குனவர்தன அவர்கள் இராணுவ தலைமை பிரதானி மற்றும் இராணுவ தளபதியான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களை 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இராணுவ தலைமையக அலுவலகத்தில் வைத்து சந்தித்தார். அவரின் மூன்று தசாப்திற்கு மேலாக இராணுவத்திற்கு அவர் செய்த அர்ப்பணிப்பு சேவைகளைப் பாராட்டி இராணுவ தளபதி வாழ்துகளை தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடலின் போது லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் தேசபிரிய குணவர்தனவுடன் சில எண்ணங்களையும் நினைவுகளையும் பகிர்ந்து கொண்டார், இவர் இராணுவம் மற்றும் கெமுனு ஹேவா படையணி ஆகியவற்றில் பல முக்கிய நியமனங்களில் பணியாற்றியுள்ளார்.

ஓய்வுபெற்று செல்லும் இந்த சிரேஷ்ட அதிகாரி தனது தளபதியின் விருப்பங்களுக்கும், சிந்தனைக்கும் நன்றி தெரிவித்ததோடு, தனது கடமைகளை நிறைவேற்றுவதில் இராணுவத் தலைவரிடமிருந்து பெற்ற ஊக்கத்திக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார். உரையாடலின் முடிவில், லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா ஓய்வு பெற்று செல்லும் அவருக்கு பாராட்டு மற்றும் பாராட்டுகளின் அடையாளமாக சிறப்பு நினைவு பரிசு வழங்கினார். Running sports | Nike Air Jordan XXX Basketball Shoes/Sneakers 811006-101 Worldarchitecturefestival