Header

Sri Lanka Army

Defender of the Nation

20th June 2020 23:50:06 Hours

அதிமேதகு ஜனாதிபதியின் பிறந்தநாளில் அனுராதபுரத்தில் இடம்பெற்ற மத ஆசிர்வாத வழிபாடுகள்

முப்படைகளின் தளபதி அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தனது பிறந்தநாளில் மதத்திற்கு முன்னுரிமை அளித்து, பல புனிதமான அனுராதபுர ருவன்வெலி சாயவில் பல்வேறு மத அனுசரிப்புகள் மற்றும் ஆசீர்வாத விழாக்களில் சனிக்கிழமை (20) காலை பங்கேற்றார். இதில் திருமதி அயோமா ராஜபக்ஷ, நெருங்கிய உறவினர்கள், கௌரவ பிரதமர் ,அமைச்சர் சமல் ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் கௌரவ பசில் ராஜபக்ஷ, கௌரவ நாமல் ராஜபக்ஷ (எம்.பி.) மற்றும் நலம் விரும்பிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

'அலோகா & சுவண்டா டம் பூஜை, (விளக்கு தூப ஏற்றல்),' கிரி பிந்து பூஜை '(பாற் சோறு), ஸ்தூபத்தைச் சுற்றியுள்ள' கப்ருக் ', கிலன்பாச ஆகிய பூஜைகளுக்கு மத்தியில் அதிமேதகு ஜனாதிபதியும் அவரது மரியாதைக்குரியவர்களும் அறிவொளியின் நினைவுச்சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ள புனிதமான ருவன்வெலி சாயவில் இடம்பெற்ற ஆசிர்வாத நிகழ்வில் கலந்து கொண்டனர். அதிமேதகு ஜனாதிபதி துத்து கெமுனு மற்றும் ராணி விஹாரா மகா தேவி ஆகியோரின் சிலைகளை வளாகத்திற்குள் மாலை அணிவிக்க முன்னர்பாரம்பரிய சம்பிரதாய சடங்குகளை நினைவூட்டுவதன் மூலம், பாரம்பரியமான 'பால்-பானை' கொதிக்கும் நடைமுறையும் மேற்கொள்ளப்பட்டன. மகா சங்கத்தின் மரியாதைக்குரிய உறுப்பினர்களுக்கு அன்னதான(ஹீல் தான) வழங்குவதில் பங்கேற்பதற்கு முன்னர், ருவன்வேலி சாயவில் உள்ள சன்னதிக்கு (புடு மெதுர) பிரசாதம் வழங்கப்பட்டது.

ஜனாதிபதிக்கு ஆசீர்வாதம் அளித்த மகா சங்கத்தின் சுருக்கமான சொற்பொழிவுகளை (அனுஷாசான) நிகழ்விளையடுத்து மகா சங்க உறுப்பினர்களுக்கு 'அஷ்டபரிஸ்கார' மற்றும் பிற 'பிரிகாரம் இடம்பெற்றன. ருவன்வெலி சாயவின் தலைவர் வென் டாக்டர் பல்லேகம ஹேமரதன நாயகே தேரர், ஸ்ரீ சமுதத்வ விஹாரயாவின் வென் நுகடென்னே பன்னானந்த நாயகே தேரர், மிஹிந்தலே ரஜ மஹா விகாரையின் தம்மரதன நாயகே தேரர், லங்காராம விஹாரதிகாரி வென் ராலேபனவே தம்மஜோதி நாயகே தேரர் ஆகியோர் ஆசிர்வாத நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பாதுகாப்பு செயலாளர், பாதுகாப்புத் தலைமை பிரதானியும் இராணுவத் தளபதி, கடற்படை மற்றும் விமானப்படை தளபதிகள் மற்றும் நூற்றுக்கணக்கான நலம் விரும்பிகள் ஆகியோரும் அன்றைய நிகழ்வில் கலந்து கொண்டனர். Mysneakers | Nike