Header

Sri Lanka Army

Defender of the Nation

17th June 2020 18:45:22 Hours

யாழில் கோவிட் – 19 தாக்கங்கள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான உயர்மட்ட சந்திப்பு

பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, கோவிட் மையத்தின் தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானி மற்றும் இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா , கடற்படைத் தளபதி வைஷ் அத்மிரால் பியல் டி சில்வா, விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் பதில் பொலிஸ் மாஅதிபர் சி.டீ விக்ரமரத்ன, தேசிய புலனாய்வு பணிப்பாளர் யாழ், முல்லைத்தீவு, கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதிகள் மற்றும் வடமாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் அவர்களது தலைமையில் கோவிட் – 19 தாக்கங்கள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான உயர்மட்ட சந்திப்பு யாழ் பாதுகாப்பு தலைமையக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றன.

யாழ் பலாலி விமான நிலையத்திற்கு வருகை தந்த பாதுகாப்பு செயலாளரை யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய அவர்கள் வரவேற்று பின்னர் 3 ஆவது சமிக்ஞை படையணியினரால் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் பாதுகாப்பு செயலாளருக்கு வழங்கி வைக்கப்பட்டன.

இராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் பதில் பொலிஸ் மாஅதிபர் போன்றோரது பங்களிப்புடன் கோவிட் – 19 பாதிப்புகள், சட்ட ஒழுங்கு பராமரிப்பு, நல்லிணக்கம் மற்றும் அமைதி, கடத்தல், போதைப் பொருள் ஒழிப்பு, கொள்ளைச் சம்பவம், குற்றங்கள் சமூக பொலிஸ் பிரிவுகளின் பாத்திரங்கள் போன்ற விடயங்களை உள்ளடக்கி பாதுகாப்பு படைகளின் பிரதானிகளின் தலைமையில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டன.

இந்த சந்திப்பின்போது பாதுகாப்பு செயலாளர் கருத்து தெரிவிக்கையில் கோவிட் – 19 நோயாளி விசாரனைகளை சரியான முறையில் பரிசீலனை செய்து பொது பாதுகாப்பு தொடர்பான விடயங்களை கவனத்தில் கொண்டு அதற்கு முக்கிய பங்களிப்பை வழங்க வேண்டும் என்று சுட்டிக்காட்டினார். அத்துடன் கோவிட் – 19 தொற்று நோய்க்கு எதிராக தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் அவசியத்தை வலியுறுத்த வேண்டும் கூறினார்.

மேலும் இந்த சந்திப்பில் முப்படையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.Sports Shoes | Air Jordan Release Dates 2020