Header

Sri Lanka Army

Defender of the Nation

16th June 2020 17:00:28 Hours

மூன்று விமானங்களின் மூலம் வருகை தரவிருக்கும் 360 பயணிகள் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைப்பதாக- நொப்கோ தெரிவிப்பு

சென்னையில் இருந்து யுஎல் - 1026 விமானத்தின் மூலம் 53 பயணிகள் ,மும்பையில் இருந்து 6ஈ-9091 விமானத்தின் மூலம் 16 பயணிகள் மற்றும் டுபாய்யில் இருந்து 291 பயணிகள் உட்பட மொத்தம் 360 பயணிகள் இன்று 17 ஆம் திகதி இலங்கையை வந்தடையவுள்ளனர். இவர்கள் அனைவரும் முப்படையினரால் நிருவகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் சார்பாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க அவர்களினால் 17 ஆம் திகதி காலை விடுக்கப்பட்ட அறிக்கையின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

புளூ வோடர் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்ட 2 நபர்கள் பிசிஆர் பரிசோதனைகளின் பின்பு இன்று 17 ஆம் திகதி தனிமைப்படுத்தப்பட்ட சான்றிதழ்களுடன் தங்களது வீடுகளுக்கு செல்வர்.17 ஆம் தினத்துடன் முப்படையினரால் பராமரித்து வரும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலிருந்து 14391 பேர் தனிமைப்படுத்தலின் பின்பு தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தற்பொழுது நாடுபூராகவுமுள்ள 44 தனிமைப்படுத்தல் மையங்களில் 4126பேர் தனிமைப்படுத்தலில் உள்ளனர்.

இன்று காலை(மு.ப.0600) மணியளவில் மேலும் 10 கடற்படை வீரர்கள் கொரோனா தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளனர் என பதிசெய்யப்பட்டுள்ளது. அவர்களில் நான்கு ஈரானியர்களும் மற்றும் 06 கடற்படை வீரர்களும் அடங்குவர். மருத்துவமனைகளில் கொரோனா தொற்று நோய்க்கு உள்ளாகியிருந்த 23 கடற்படையினர் மற்றும் 06 வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் மருத்துவமனையிலிருந்து பூரன குணமாகி 17 ஆம் திகதி தங்களது வீடுகளுக்கு சென்றுள்ளனர்.

இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க அவர்களினால் இன்று காலை 17 ஆம் திகதி விடுக்கப்பட்ட குரல் பதிவு பின்வருமாறு. Sports brands | Nike Shoes