Header

Sri Lanka Army

Defender of the Nation

16th June 2020 16:50:28 Hours

மூன்று ஈரானியர்கள் மற்றும் ஐந்து கடற்படையினருக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக ஊர்ஜிதம்

நேபாளத்திலிருந்து எச்- 6731 விமானத்தின் மூலம் இலங்கைக்கு வருகை தந்த 34 நபர்கள் தனிமைப்படுத்தலுக்காக தனிமைப்படுத்த மையங்களுக்கு அனுப்பி வைத்ததாக ராஜகிரியவிலுள்ள கோவிட் – 19 தடுப்பு செயல்பாட்டு மையத்தினால் அறிக்கை வெளியிடப்பட்டன.

இதற்கிடையில் பூனானை ப்ரென்டிக்‌ஷிலிருந்த (15) பேரும், தியகமையிலிருந்து (22) பேரும், மியாங்குளத்திலிருந்த (12) பேரும், பனிச்சங்கேனியிலிருந்து (7) பேரும் மொத்தமாக 179 பேர் தனிமைப்படுத்தலின் பின்பு பிசிஆர் பரிசோதனைகளின் பின்பு சுகாதார சான்றிதழ்களுடன் தமது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இன்றைய தினம் வரை தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலிருந்து 14,276 பேர் தனிமைப்படுத்தலின் பின்பு சுகாதார பரிசோதனைகளுடன் தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் நாடாளவியல் ரீதியாக முப்படையினரால் நிர்வாகித்து வரும் 44 தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் 4,152 நபர்கள் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் இன்று (16) ஆம் திகதி 4 மணிக்கு ஈரானியர்கள் மூவர் மற்றும் கடற்படை வீரர்கள் 5 பேர் கொரோனா தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளனர் என்று ஊர்ஜிதம் செய்யப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அத்துடன் கொரோனா தொற்று நோய்க்கு உள்ளாகிய 23 கடற்படையினர் மற்றும் வெ ளிநாடுகளைச் சேர்ந்த 06 இலங்கையர்கள் முழுமையாக 29 பேர்கள் பூரனமாக குணமாகி மருத்துவமனையிலிருந்து வெளியேறிச் சென்றனர்.

தற்போதைய புதிய நிலவரப்படி கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு உள்ளாகிய கடற்படையைச் சேர்ந்த 890 பேரில் 763 பேர் பூரன குணமாகி வைத்தியசாலையிலிருந்து வெளியேறியதுடன் மேலும் 127 கடற்படையினர் மருத்துவமனையில் தங்க வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Authentic Sneakers | jordan Release Dates