Header

Sri Lanka Army

Defender of the Nation

12th June 2020 10:10:28 Hours

173 கடற் படை வீரர்கள் சிகிச்சை பெற்று வருவதாக நொப்கோ தெரிவிப்பு

சென்னை 109 பயணிகள், மலைதீவு ஒரு பயணி மற்றும் கட்டார் ஒரு பயணி முறையே விமான இல எஸ்ஜி-9061, யுஎல்-102 மற்றும் கிவ்ஆர்-668 ஆகிய விமானங்களினூடாக இன்று 14 ஆம் திகதி இலங்கை வரவுள்ளனர் மற்றும் அவர்கள் அனைவரும் இராணுவத்தினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பப்படுவர் என ராஜகிரியவில் அமைந்துள்ள கொவிட்-19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் சார்பாக 14 ஆம் திகதி இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க அவர்களினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிட்ரஸ் வஸ்கடுவை (72) மற்றும் ருவல கல்பிட்டிய (5) ஆகிய தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 77 நபர்கள் பிசிஆர் பரிசோதனையின் பின்னர் இன்று 14 ஆம் திகதி தனிமைப்படுத்தல் சான்றிதல்களுடன் தங்களது வீடுகளுக்கு புறப்பட்டுச் செல்லவுள்ளனர்.

இன்று 14 ஆம் திகதியுடன் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 13615 நபர்கள் தங்கள் வீடுகளுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர். தற்பொழுது நாடுபூராகவுமுள்ள முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 44 தனிமைப்படுத்தல் மையங்களில் 4463 பேர் தனிமைப்படுத்தலில் உள்ளனர்.

வெளிநாடுகளில் இருந்து வந்த 3 பேர் மற்றும் 1 கடற்படை வீரர் உள்ளிட்ட மேலும் 4 பேர் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என இன்று காலை(மு.ப. 6.00) பதிவுசெய்யப்பட்டுள்ளது. 22 கடற்படை வீரர்கள் சுகமடைந்து இன்று வைத்தியசாலையில் இருந்து தங்களது வீடுகளுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

அதனடிப்படையில் இன்றுடன் கொவிட்-19 தொற்றுக்குள்ளான கடற்படையினரின் மொத்த எண்ணிக்கை 877 ஆகும், அவர்களில் குணமடைந்த 704 பேர் பிசிஆர் பரிசோதனையின் பின்னர் வைத்தியசாலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். தொற்றுக்குள்ளான 173 கடற்படை வீரர்கள் தற்பொழுது சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க அவர்களினால் இன்று காலை (14) ஆம் திகதி வெளியிடப்பட்ட குரல் பதிவு அறிக்கை பின்வருமாறு latest Running | Upcoming 2021 Nike Dunk Release Dates - Iebem-morelos