Header

Sri Lanka Army

Defender of the Nation

10th June 2020 22:02:19 Hours

வழமையான இயல்புநிலை குறித்து ஜனாதிபதி செயலனி மற்றும் கோவிட் மைய அதிகாரிகளுக்கு இடையில் கலந்துரையாடல்.

நாட்டில் தற்போது நிலவும் வழமையான சூழ் நிலைமை தொடர்பாக ஆராய்வதற்கு கலந்துரையாடலொன்று கோவிட் – 19 தடுப்பு தேசிய நடவடிக்கை மையத்தில் சுகாதார அமைச்சர் கௌரவத்திற்குரிய திருமதி பவித்திரா வன்னியாரச்சி, கோவிட் தடுப்பு செயல்பாட்டு மையத்தின் தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானி மற்றும் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா, சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க அவர்களது பங்களிப்புடன் இம் மாதம் (10) ஆம் திகதி இடம்பெற்றன.

இந்த கலந்துரையாடலுக்கு ஜனாதிபதி செயலனியிலிருந்து வருகை தந்த நபர்களை இராணுவ தளபதி அவர்கள் வரவேற்றார்.

இந்த கலந்துரையாடலின் போது புதிய சுகாதார முறைகளை அமுல்படுத்துவது, விமான நிலைய வளாகத்தில் சேர்க்கப்பட வேண்டிய மேம்பாடுகள், பயணிகளின் வருகைகளின் பி.சி.ஆர் பரிசோதனை நடத்துவது தொடர்பாகவும், விமான நிலைய ஊழியர்களை வெளிநாட்டு வருகையாளர்களுக்கு முகமளிப்பது தொடர்பாகவும், சுற்றுலாத்துறை தனியார் நிறுவனங்களுடன் சுகாதார அதிகாரிகள் தொடர்பான விடயங்கள் ஆராயப்பட்டன.

அத்துடன் மத்திய கிழக்கு நாடுகளான லெபனான், கட்டார் நாடுகளில் சிக்கி தவிக்கும் எமது நாட்டவர்களை மீட்பது தொடர்பாக கலந்துரையாடலில் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டன.

அத்துடன் கடற்படையினர் விடயத்தில் நடைமுறைகளை திருத்தும் பணிகளில் மிகமுக்கிய கவனம் எடுக்கப்பட வேண்டும். அத்துடன் கல்வி வகுப்புகள் ஆரம்பிப்பதற்கு முன்பு சரியான சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக ஆராயப்பட்டன.

மூலோபாய ரீதியாக பொருத்தமான முன்னுரிமைகள் குறித்து உரையாற்றும் போது நன்கு வடிவமைக்கப்பட்ட திட்டத்தின் கீழ் வெளிநாட்டு வருகையை ஏற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி செயலணி உறுப்பினர்கள் சுட்டிக் காட்டினர். பொது வாழ்க்கை, பொருளாதாரக் கோளங்கள் போன்றவற்றுக்கு இயல்புநிலை விரைவாக திரும்புவது தொடர்பாக கவனமாக செயற்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் மேல் மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் டொக்டர் சீதா அரம்பேபொல, இலங்கை துறைமுகத்தின் தவிசாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் தயா ரத்நாயக, ஜனாதிபதி செயலகத்தின் உதவி செயலாளர் ஓய்வு பெற்ற அத்மிரால் ஜயந்த கொலம்பஹே மற்றும் முப்படை அதிகாரிகள் பங்கேற்றுக் கொண்டன latest Running Sneakers | Nike