Header

Sri Lanka Army

Defender of the Nation

10th June 2020 15:10:31 Hours

தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைப்பு கோவிட் மையம் தெரிவிப்பு

தனிமைப்படுத்தப்பட்ட மையங்களான தியாலாவையிலிருந்து (15) பேரும், டொல்பின் ஹோட்டலிலிருந்து (46) பேரும், நிபுன பூசா முகாமில் (06) பேரும், கல்பிடியவிலிருந்து (06) பேரும், கடற்படையின் க்லஷ்டர் முகாமில் (05) பேரும், பூனானையிலிருந்து (02) பேரும், கடுகெலியாவில் ஒருவரும் நேற்று (10) ஆம் திகதி தனிமைப்படுத்தலின் பின்பு சுகாதார சான்றிதழ்களுடன் தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக இன்று 11 ஆம் திகதி இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க அவர்கள் கோவிட் தடுப்பு மைய அறிக்கையை வெளியிட்டார்.

இன்று வரைக்கும் முப்படையினரால் பராமரித்து வரும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலிருந்து 12,533 பேர் தனிமைப்படுத்தலின் பின்பு தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் நாடாளவியல் ரீதியாக தற்போது முப்படையினரால் பராமரித்து வரும் 43 தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் 5,060 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய கொரோனா தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளவர்கள் கட்டாரிலிருந்து வந்த ஒருவருக்கும், இந்தியாவிலிருந்து வந்த நபரொருவருக்கும் தொற்றியுள்ளதாக ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் கடற்படையில் கொரோனா தொற்று நோய்க்கு உள்ளாகிய 866 பேரில் 637 பேர் பூரண குணமடைந்து பிசி பரிசோதனைகளின் பின்பு வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதுடன் 229 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Best Sneakers | New Balance 327 Moonbeam , Where To Buy , WS327KB , Air Jordan 1