Header

Sri Lanka Army

Defender of the Nation

07th June 2020 00:16:44 Hours

மும்பாய் மற்றும் ஐக்கிய இராஜ்ஜியத்தில் இருந்து மேலும் பலர் வருகை கோவிட் மையம் தெரிவிப்பு

இம் மாதம் (6) ஆம் திகதி இரவு மும்பாயிலிருந்து கொழும்புக்கு வருகை தந்த எஸ்ஜி 9067 விமானத்தின் மூலம் 86 பேர் இலங்கைக்கு வருகை தந்தனர். இவர்களில் இலங்கையர்கள் 62 பேரும், வெளிநாட்டவர்கள் 24 பேரும் உள்ளடங்குவார்கள் என்று கோவிட்- 19 தேசிய தடுப்பு நடவடிக்கை மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், இன்று (7) ஆம் திகதி காலை இலங்கைக்கு சொந்தமான யுஎல் 504 விமானத்தின் மூலம் இங்கிலாந்திலிருந்து 278 நபர்கள் இலங்கைக்கு வருகை தந்தனர். இவர்கள் கொஸ்கொட ஷெரட்டன் ஹோட்டலில் (34) பேரும், கிளப் டொல்பின் வைக்கலில் (10) பேரும், வஸ்கடு சிட்ரஸ் ஹோட்டலில் (13) பேரும், ராஜகிரிய ஆயூர்வேத மருத்துவமனையில் (110) பேரும், நீர்கொழும்பு ரன்வெலி ஹோட்டலில் (92) பேரும், வாதுவ ப்ளூ வாட்டர்சில் (18) பேரும், மற்றும் தியதலாவா கெமுனு காலாட்படை முகாம் தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் ஒருவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

மேலும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களான வாட்டர்ஷ் ஹோட்டலிலுள்ள (117) பேரும், பூசா நிபுனையிலிருந்து (10) பேரும், கல்பிட்டி ருவல்லையிலிருந்து ஒரு நபரும் மொத்தமாக 128 பேர் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டதன் பின்பு இம் மாதம் (7) ஆம் திகதி சுகாதார சான்றிதழ்களுடன் தமது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இன்று (7) ஆம் திகதி வரையிலான காலப்பகுதியினுள் முப்படையினரால் நிர்வகித்து வரும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலிருந்து 12,218 பேர் தனிமைப்படுத்தலின் பின்பு தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் நாடாளவியல் ரீதியாக பாதுகாப்பு படையினரால் நிர்வாகித்து வரும் 45 தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் 5,347 நபர்கள் தனிமைப்படுத்தலுக்காக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையில் கோவிட் – 19 கொரோனா தொற்று நோய்க்கு உள்ளாகிய 847 பேரில் 488 பேர் பூரன குணமடைந்து பி.சி.ஆர் பரிசோதனைகளின் பின்பு வைத்தியசாலையிலிருந்து வெளியேறினர். அத்துடன் எஞ்சிய 359 பேர் வைத்தியசாலையிலிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். latest jordans | Air Jordan