Header

Sri Lanka Army

Defender of the Nation

05th June 2020 09:54:06 Hours

வெளிநாட்டிலிருந்து எமது நாட்டைச் சேர்ந்த நபர்கள் வரவுள்ளனர் என எதிர்பார்க்கப்படுகின்றன

இலங்கை எயார்லைன்சிற்கு சொந்தமான யூஎல் 1206 விமானத்தின் மூலம் ஜேர்மன் ஹம்பேர்க்கிலிருந்து இலங்கையைச் சேர்ந்த வெளிநாட்டவர்கள் 235 பேர் மேன்மை தங்கிய ஜனாதிபதியின் பணிப்புரையின் கீழ் மத்தளை ராஜபக்‌ஷ சர்வதேச விமான நிலையத்திற்கு இம் மாதம் (6) ஆம் திகதி வந்தடைந்தனர்.

இந்த குழுவில் 235 சிவில் கப்பல் உறுப்பினர்கள் வெளிநாட்டு துறைமுகங்களில் சிக்கித் தவித்து வந்தனர் இவர்களை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு இராணுவத்தினரால் பராமரித்து வரும் ஈடன் ரிசோர்ட் ஹோட்டல், பேருவளை, கலுவாமோதர தனிமைப்படுத்தப்பட்ட மையங்களின் தங்க வைக்கப்பட்டதன் பின்னர் மருத்துவ பரிசோதனைகளுக்குப் பின்பு சுகாதார சான்றிதழ்களுடன் தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர்.

இராணுவ பேச்சாளரான பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க அவர்கள் கோவிட் – 19 தேசிய தடுப்பு செயல்பாட்டு மையத்தில் 6 ஆம் திகதி மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது இந்த அறிக்கியினை வெளியிட்டார்.

அத்துடன் இலங்கைக்கு சொந்தமான எஸ்ஜி 9067 விமானத்தின் மூலம் மும்பாயிலிருந்து 78 பேர் வெளிநாட்டிலிருந்து இம் மாதம் (6) ஆம் திகதி வருகை தந்தனர்.

அத்துடன் கியூஆர் இலக்கமுடைய 668 விமானத்தின் மூலம் (7) ஆம் திகதி அதிகாலை 0145 மணிக்கு அமெரிக்க தூதரகத்தின் 4 ஊழியர்கள் வருகை தரவுள்ளனர். அத்துடன் யூஎல் 504 விமானத்தின் மூலம் ஐக்கிய இராஜ்ஜியத்திலிருந்து 291 வெளிநாட்டவர்கள் அதிகாலை 0245 க்கு இலங்கைக்கு வரவுள்ளனர் என்று எதிர்பார்க்கப்படுகின்றன.

இரண்டு வார காலமாக தனிமைப்டபடுத்தப்பட்ட 338 நபர்கள் இன்று காலை (6) ஆம் திகதி இராணுவத்தினரால் பராமரித்து வரும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களான ஹோட்டல் ப்ளூ வாட்டர்சிலிருந்து 6 பேரும், இரனைமடுவிலிருந்து (70) பேரும், கல்கந்தையிலிருந்து (46) பேரும், பிடிபன சேவை படையணியில் (159) பேரும், இராஜகிரி ஆயூர்வேத வைத்தியசாலையில் (42) பேரும், நிபுன பூசா முகாமிலிருந்து (05) பேரும் சுகாதார பரிசோதனைகளின் பின்பு சான்றிதழ்களுடன் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இன்றைய தினமான (6) ஆம் திகதியுடன் முப்படையினரால் பராமரித்து வரும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலிருந்து 12,071 நபர்கள் வெளியேறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அத்துடன் தற்போது நாடாளாவியல் ரீதியாக முப்படையினரால் நிர்வாகித்து வரும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் 4878 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இம் மாதம் (6) ஆம் திகதி இராணுவ பேச்சாளரான பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க அவர்கள் ஆற்றிய வீடியோ காட்சியை காணலாம்.Sports brands | Nike Air Force 1 , Sneakers , Ietp STORE