Header

Sri Lanka Army

Defender of the Nation

05th June 2020 10:01:06 Hours

375 கடற்படையினர் இன்னும் வைத்தியசாலையில்

எஸ்ஜி விமானம் மும்பாயிலிருந்து நேற்று இரவு 86 பயணிகளுடனும் அத்தோடு யுஎல் 504 விமானம் இன்று காலை 278 பேருடன் இன்று காலை ஐக்கிய இராச்சியத்தில் இருந்து இலங்கை வந்ததாக கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் சார்பாக இராணுவ ஊடக பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரம சிங்க இன்று காலை வெளியிட்ட ஊடக அறிக்கை தெரிவிக்கின்றது.

ஹொட்டல் புளூ வோட்டர் தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து தங்களது தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்துக் கொண்ட 117 பேர் பிசீஆர் பரிசோதனைகளின் பின்னர் இன்று (07 )வீடு செல்லவுள்ளனர்.

அந்த வகையில் இன்றுவரை (07) முப்டையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து 12090 பேர் தனிமைப்படுத்தலின் பின்னர் வீடு சென்றுள்ளனர்.

தற்போது வரை 5135 பேர் நாமளாவிய ரீதியில் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 43 தனிமைப்படுத்தல் நிலையங்களில் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இன்றுக் காலை 13 கொவிட் 19 தோற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களில் மூவர் ரஷ்ய நாட்டிலிருந்தும் ஒருவர் குவைட் நாட்டிலிருந்தும் வந்தவர்கள் ஏனைய 09 பேர் கடற்படையினர் ஆவர். .

அதே வேளையில் 33 கடற்படையினர் பூரண சுகமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இது வரை (07) கொவிட் 19 வைரஸ் தாக்கத்திற்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 847 ஆகும். இவர்களில் 472 பேர் முழுமையாக குணமடைந்து பிசீஆர் பரிசோதனையின் பின்னர் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். 375 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெறுகின்றனர்.

இராணுவ ஊடக பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரம சிங்கவின் கானெளியை இங்கு காணலாம் 7 ஜுன் 2020.Running sneakers | UK Trainer News & Releases