Header

Sri Lanka Army

Defender of the Nation

07th June 2020 00:42:41 Hours

மேலும் 98 தொண்டர் படையணி சிரேஸ்ட அதிகாரிகள், அதிகாரிகள் ஜனாதிபதியால் அடுத்த நிலைக்கு பதவி உயர்வு

பாதுகாப்பு தலைமைப் பிரதானியும் இராணுவத் தளபதியும் கொவிட் -19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் பரிந்துரைக்கு அமைவாக பாதுகாப்பு அமைச்சின் ஏற்பாடுகளின் பிரகாரம் முப்படைகளின் சேனாதிபதி அதிமேதகு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ அவர்களினால் இலங்கை தொண்டர் படையணியின் 98 சிரேஸ்ட அதிகாரிகள், அதிகாரிகள் அடுத்த நிலைக்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக இராணுவ செயலகம் இன்று காலை (06) அறிவித்தது.

அதற்கமைவாக 61 அதிகாரிகள் கெப்டன் நிலையில் இருந்து மேஜர் நிலைக்கும் 19 அதிகாரிகள் மேஜர் நிலையில் இருந்து லெப்டின்ன்ட் கேர்ணல் நிலைக்கும் 14 அதிகாரிகள் லெப்டின்ன்ட் கேர்ணல் நிலையில் இருந்து கேர்ணல் நிலைக்கும் 04 அதிகாரிகள் லெப்டின்ன்ட் கேர்ணல் நிலையில் இருந்து கௌரவ கேர்ணல் நிலைக்கும் இலங்கை தொண்டர் படையணி வரலாற்றின் ஒரே நாளில் அதி கூடிய அளவிலான மொத்தம் 98 அதிகாரிகள் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

பாதுகாப்புத் தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சில்வா இந்த காலதாமதமாக இருந்த பதவி உயர்வுகள் தொடர்பாக உணர்ந்து கட்டமைப்பு மாற்றங்களுக்கு ஏற்ப அவர்களின் தகுதி, பதவி வாய்ப்புக்கள், கடின உழைப்பிற்கான மகிழ்ச்சி, முழு மனதுடன் எதிர்காலத்தில் சிறப்பாகச் செயற்படுவதற்கான ஒரு தூண்டுதலுக்கும், தன்னலமற்ற சேவைகளை பெருக்கவும், கட்டமைப்பின் நலன்களுக்கு அமைவாக இவ்வாறான பதவி உயர்வுகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக தெரிவித்தார்.

இலங்கை தொண்டர் 1861ம் ஆண்டு சிவில் ரயிபல் குழுவாக தோற்றம் பெற்றது. பின்னர் வெளியிட்ட பிரகடனம் ஒன்றின் ஊடாக கலாற்படை சிப்பாய்களுக்கான அடிப்படையாக மாற்றம் பெற்றது. 1981 சித்திரை மாதம் 01 ம் திகதி இலங்கை தொண்டர் படையணியாக இருந்தது 1972 ம் மே மாதம் 22ம திகதி இலங்கை குடியரசாக மாறியதன் பின்னர் இலங்கை தொண்டர் படையணியாக பெயர் மாற்றம் பெற்றது. இது நிறுவப்பட்டதிலிருந்து இன்று வரை நூறு அல்லது ஆயிரக்கணக்கிலான உயர் திறனுடனான காலாட்படை வீரர்கள் மற்றும் தொண்டர் தொழில் வல்லுனர்களை நாட்டுக்காய் உருவாக்கியுள்ளது.Sportswear Design | Nike Dunk Low Disrupt Pale Ivory - Grailify