Header

Sri Lanka Army

Defender of the Nation

05th June 2020 07:54:06 Hours

இன்று 04 பேர் மட்டுமே இனங் காணப்பட்டுள்ளனர்.

நேற்று (05) குறிப்பிட்டதற்கு அமைவாக இலங்கை விமான சேவைக்கு சொந்தமான யூஎல் 1206 விமானம் ஊடாக இலங்கையை சேர்ந்த வெளிநாட்டு கப்பல்களில் சேவையாற்றிய சிவில் கப்பல் ஊழியர்கள் 236 பேரை ஜெர்மன் எம்பார்கிலிருந்து மத்தலை ராஜபக்‌ஷ சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்து வருவதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொவிட் 19 பரவல் தடுப்பு தேசிய செயல்பாட்டு மையத்தின் சார்பாக இன்று காலை (06) இராணுவ ஊடக பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

புளு வோட்டர் (16) , இரனைமடு (70) , கல்கந்தை (46), பிட்டிபான சேவைகள் படையணி முகாம் (159) , ராஜகிரிய ஆயுர் வேத வைத்தியசாலை (42) மற்றும் நிபுன பூஸ்ஸ (05) ஆகிய தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தல் செயல்முறை நிறைவு செய்த மொத்தம் 338 பேர் பிசிஆர் பரிசோதனைகளின் பின்னர் இன்று (06) தனிமைப்படுத்தல் சான்றிதழ்களுடன் தங்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.

இன்று வரை (06) முப்படைகளினால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் மொத்தம் 11,733 பேர் தனிமைப்படுத்தப்பட்டு வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இதுவரை முப்படைகளினால் நிர்வகிக்கப்படும் 45 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 5,216 பேர் தொடர்ந்து தனிமைப்படுத்தலில் உள்ளனர்.

இன்றுக் காலை 0600 மணி வரை 04 கொவிட் 19 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களில் பங்களாதேஷ் நாட்டிலிருந்து வந்த இருவரும் மற்றைய இருவர் கடற்படையினர். Adidas footwear | Sneakers