Header

Sri Lanka Army

Defender of the Nation

29th May 2020 11:12:32 Hours

தனிமைப்படுத்தலின் பின் மேலும் 58 பேர் வீடு திரும்பல்

முப்படையினால் நிர்வகிக்கப்படும் ஐ.டி.ஐ கன்னொருவ (41), விவசாய விடுமுறை விடுதி கன்னொருவ (01), தேசிய கட்ட்டம் குண்டசாலை (01) ஒத்துழைப்பு மையம் குண்டசாலை (01) மற்றும் நிபுன புஸ்ஸ (14) தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தல் செயற்பாடுகள் நிறைவடைந்த மொத்தம் 58 பேர் பி.சி.ஆர் சோதனைகளின் பின்னர் இன்று (01) தனிமைப்படுத்தல் சான்றிதழ் வழங்கி தங்கள் வீடுகளுக்கு விடுவிக்கப்படவுள்ளனர் என இராணுவ ஊடக பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்கவின் ஊடக அறிக்கை தெரிவிக்கின்றது.

இன்றுவரை (01) முப்படைகளினால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்கங்களில் இருந்து மொத்தம் 11,488 தனிமைப்படுத்தப்பட்டு வெளியேறியுள்ளனர்.

தற்போது முப்படையினரால் நடாத்தப்படும் 44 தனிமைப்படுத்தல் மையங்களில் 5,108 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் உள்ளனர். இன்று 01ம் திகதி வரை மொத்தம் 754 கடற்படை வீரர்கள் கொவிட் 19 வைரஸ் தாக்கத்தில் உள்ளாகி உள்ளனர். கடந்த 24 மணித்தியாலயங்களில் மட்டும் 04 கடற்படை வீரர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர். 403 பேர் முழுமையாக சுகமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன் மேலும் 348 கடற்படையினர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். Sports News | Men Nike Footwear