Header

Sri Lanka Army

Defender of the Nation

29th May 2020 10:14:32 Hours

மேலும் 303 பேர் அவுஸ்திரேலியா மற்றும் இந்தியாவில் இருந்த இலங்கைக்கு

அவுஸ்திரேலியா (285) மற்றும் இந்தியாவில் (18) இருந்த மேலும் 303 பேர் நேற்று காலை (30) இலங்கை விமானம் யுஎல் 605 மற்றும் யுஎல் 1042 மூலம் இலங்கை வந்தனர். அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் செயல்முறைக்காக இராணுவத்தால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க இன்று (31) காலை தெரிவித்தார்

முப்படையினால் நிர்வகிக்கப்படும் கோல்ட் சேண்ட் (69), இராஜகிரிய ஆயுர்வேத வைத்தியசாலை (109) ஹொட்டல் புளூ வோட்டர் (01), தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தல் செயற்பாடுகள் நிறைவடைந்த மொத்தம் 179 பேர் பி.சி.ஆர் சோதனைகளின் பின்னர் இன்று (30) தனிமைப்படுத்தல் சான்றிதழ் வழங்கி தங்கள் வீடுகளுக்கு விடுவிக்கப்படவுள்ளனர். இன்றுவரை (30) முப்படைகளினால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்கங்களில் இருந்து மொத்தம் 11,236 பேர் தனிமைப்படுத்தப்பட்டு வெளியேறியுள்ளனர்.

தற்போது முப்படையினரால் நடாத்தப்படும் 43 தனிமைப்படுத்தல் மையங்களில் 5,289 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் உள்ளனர். இன்று 30 ம் திகதி வரை மொத்தம் 730 கடற்படை வீரர்கள் கொவிட் 19 வைரஸ் தாக்கத்தில் உள்ளாகி உள்ளனர். கடந்த 24 மணித்தியாலயங்களில் மட்டும் 05 கடற்படை வீரர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர். 361 பேர் முழுமையாக சுகமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன் மேலும் 369 கடற்படையினர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். Best Nike Sneakers | Nike Off-White