12th May 2020 18:15:08 Hours
யாழ் குடா நாட்டில் அமைதி, நல்லிணக்கம், ஒத்துழைப்பு மற்றும் சமூகத்தின் நல்வாழ்வை மேம்படுத்தல், சிவில் மற்றும் இராணுவத்தினருக்கும் இடையில் நட்புறவை ஏற்படுத்துதல் நிமித்தம், காங்கேசன் துறையில் நிர்மாணிக்கப்பட்ட ‘நல்லிணக்க நிலையமானது யாழ் பாதுகாப்பு படை தலைமையகத்தினரால் திங்கட்கிழமை (11) ஆம் திகதி திறந்துவைக்கப்பட்டது.
இந்த கட்டிடமானது, யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வனிகசூரிய அவர்களின் எண்ணக்கருக்கமைவாக சமூகம் சார் நல்லிணக்கம் மற்றும் திட்டங்களின் எதிர்பார்ப்புகளை வலுப்படுத்தும் பல சமூகம் சார்ந்த திட்டங்களைத் தொடங்குவதற்காகவும் யாழ் குடாநாட்டில் பொது மக்களின் சுகாதாரம், கல்வி, தகவல் தொடர்பு மற்றும் தகவல், கட்டுமானம், பெண்கள் மற்றும் குழந்தைகளின் வலுவூட்டல், கலாச்சார மற்றும் மத விவகாரங்கள், விவசாயம் மற்றும் வாழ்வாதாரம், பேரழிவு தடுப்பு, விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு மற்றும் தொழில் பயிற்சி ஆகியவைகளை பூர்தி செய்து கொள்வதற்காகவும் விஷேடமாக யாழ்ப்பாணத்திலுள்ள இளைஞர்களின் பயன்பாட்டிற்காக முழுமையாக புனரமைக்கப்பட்டுள்ளது.
இப் புதிய நிலையம் பின்தங்கிய மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்யும் முகமாக கலாச்சார நடனங்கள், நாட்டுப்புற இசை, கல்வி, தகவல் தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மற்றும் குறைகளை நிவர்த்தி செய்தல் ஆகியவற்றின் பயிற்சிகளுக்கு பயன்படுத்தப்படும். படையினர்களின் உறவினை மேம்படுத்தி கொள்வதற்காக விளையாட்டு மேம்பாடு, அழகு சாதனை, கலாச்சாரம், சுகாதார பராமரிப்பு நிலையம் ஆகிய தேவைகளை பூர்தி செய்து கொள்வதற்காக இந்த நிலையம் பயன்படுத்தப்படும் என எதிர்பார்கப்படுகின்றது. இந்த கட்டிடம் சுபநேரத்தில் திறந்து வைக்கப்பட்டது. இக் கட்டிடத்தின் நிர்மாணப்பணிகளானது 515 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி அவர்களின் மேற்பார்வையில். 10 ஆவது இலங்கை பீரங்கி படையணி மற்றும் 5 ஆவது இலங்கை இராணுவ பொறியியல் சேவைப் படையணியினரால் நிறைவு செய்யப்பட்டன. இந்த புதிய நிலையத்திற்கு தேவையான செலவுகள் விரும்பிகளின் உதவியுடன் யாழ் பாதுகாப்பு படை தலைமையகத்தினரால் மேற்கொள்ளப்பட்டது.
இந்த திறப்புவிழா நிகழ்விற்கு யாழ் பாதுகாப்பு படைத் தளபதி, உட்பட 51,52 மற்றும் 55 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவுகளின் படைத் தளபதிகள் மற்றும் வடக்கு முன்னரங்க பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படைத் தளபதி, யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பொது நிர்வாக பிரிகேடியர் மற்றும் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் நிர்வாக மற்றும் விடுதி பிரிகேடியர், 515 ஆவது பிரிகேட் தளபதி உட்பட சிரேஷ்ட அதிகாரிகள், மற்றும் படையினர்கள் பலர் கலந்து கொண்டனர். url clone | Yeezy Boost 350 Trainers