Header

Sri Lanka Army

Defender of the Nation

09th May 2020 18:20:31 Hours

மேலும் தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் தங்களது வீடுகளுக்கு செல்லல்

இராணுவத்தினரால் நிர்வகிக்கப்படும் பூனானை(75), கண்டக்காடு(62), விடத்தபாலி(298) ஐயக்கச்சி (80) தியத்தலாவை (05),ஹோட்டல் டொல்பின் (01) மற்றும் கடற்படையினரால் நிர்வகிக்கப்படும் நிபுனு பூசா (12) ஆகிய தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 533 பேர் பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொண்ட பின்னர் தனிமைப்படுத்தப்பட்ட சான்றிதழ்களுடன் 9 ஆம் திகதி தங்கள் வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர் என 9 ஆம் திகதி கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுவரை, 9 ஆம் திகதியுடன் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் மொத்தம் 6299 தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் தங்கள் வீடுகளுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். தற்பொழுது நாடுபூராகவுமுள்ள 39 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 4428 பேர் தனிமைப்படுத்தலில் உள்ளனர்.

அதனடிப்படையில் இன்று 9 ஆம் திகதியுடன் கோவிட்-19 தொற்றுக்குள்ளான கடற்படையினரின் மொத்த எண்ணிக்கை 409 ஆகும். அனேகமானோர் கடற்படை முகாமிற்கு உள்ளே நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் என இனங்காணப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுருக்கம்

தனிமைப்படுத்தப்பட்ட மொத்தம் நபர்கள் -6299

தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ள நபர்கள் -4428

தனிமைப்படுத்தல் நிலையங்கள்- 39 url clone | Nike News