07th May 2020 22:59:29 Hours
மாணவர்கள் மற்றும் அரச அதிகாரிகள் உட்பட 197 பேர் துபாய்யில் இருந்து 7 ஆம் திகதி காலை இலங்கைக்கு சொந்தமான விமானத்தினூடாக இலங்கை வந்தடைந்தனர். அவர்கள் அனைவரும் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு தனிமைப்படுத்தலுக்காக அனுப்பப்பட்டுள்ளனர் என 7 ஆம் திகதி கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளான நபர்களுடன் தொடர்புகளை பேணிய மோதர, ராஜகிரிய மற்றும் கொலன்னாவையைச் சேர்ந்த 72 பேர் கலகந்த தனிமைப்படுத்தல் மையத்திற்கு அனுப்பப்பட்டு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் மூலம் அவர்கள் தொற்றுக்குள்ளவில்லை என கண்டறியப்பட்டன, அதன் பின்னர் அவர்கள் தங்களது வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர். அதன் பிரகாரம் இராணுவத்தினரால் நிர்வகிக்கப்படும் பனிச்சங்கேணி,மீயாங்குளம்,கட்டுகெலியாவை,கலகந்த,கல்பிட்டிய மற்றும் ஹெகிட்ட ஆகிய தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 148 பேர் பிசிஆர் பரிசோனையின் பின்னர் தனிமைப்படுத்தல் சான்றிதல்களுடன் இன்று 7 ஆம் திகதி தங்களுடைய வீடுகளுக்கு சென்றுள்ளனர். இதுவரை, 7 ஆம் திகதியுடன் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் மொத்தம் 5442 தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் தங்கள் வீடுகளுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். தற்பொழுது நாடுபூராகவுமுள்ள 41 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 5182 பேர் தனிமைப்படுத்தலில் உள்ளனர்.
அதனடிப்படையில் இன்று 6 ஆம் திகதியுடன் கொவிட்-19 தொற்றுக்குள்ளான கடற்படையினரின் மொத்த எண்ணிக்கை 366 ஆகும். அனேகமானோர் கடற்படை முகாமிற்கு உள்ளே நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது ( முகாமிற்குள் 284 மற்றும் முகாமிற்கு வெளியே 82)
சுருக்கம்
தனிமைப்படுத்தப்பட்ட மொத்தம் நபர்கள் -5442
தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ள நபர்கள் -5182
தனிமைப்படுத்தல் நிலையங்கள்- 41 Running Sneakers | Nike