Header

Sri Lanka Army

Defender of the Nation

07th May 2020 07:04:53 Hours

'புத்தரின் போதனைகளை கடைப்பிடித்து மக்களைக் காப்பாற்ற உறுதிகொள்வோம் - ஜனாதிபதி தெரிவிப்பு

அதிமேதகு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அவர்கள் தனது விஷேட வெசாக் பண்டிகை செய்தியில் இந்த வெசாக் பருவத்தில் புத்தரின் போதனைகளை கடைப்பிடிப்பதன் மூலம் நாமும் உடல் மற்றும் ஆன்மீக ஆரோக்கியத்தை அடைய முடியும் என்று அவர் நம்புகிறார், இந்த பேரழிவின் போது புத்தரின் போதனைகளை கடைப்பிடிப்பதன் மூலம் மக்களையும் நாட்டையும் காப்பாற்ற நாம் தீர்மானிக்க வேண்டும் என குறிப்பிட்டார். அவரது வெசாக் செய்தியின் முழு உரையையும் இங்கே பின்வருமாறு:

உலகெங்கிலும் வாழும் பௌத்தமக்களுடன் இணைந்து இலங்கை வாழ் பௌத்தர்களும் பௌத்த சமயத்தின் அதி உன்னத சமய விழாவான வெசாக் பண்டிகையை மிகுந்த சமயப் பற்றுடன் கொண்டாடுகின்றனர். எமது நாட்டில் பௌத்த சமயத்தவர்கள் பண்டைய காலம் முதல் புத்த பெருமான் மீதான பக்தயுடன் புண்ணிய கிரியைகளில் ஈடுபட்டு வெசாக் பண்டிகைக் காலத்தை கழிக்கும் வழமை இருந்து வருகின்றது.

முழு மனித சமூகத்தையூம் நோய்த் தொற்று அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு சூழ்நிலையிலேயே உலகெங்கிலும் வாழும் பௌத்தர்களை போன்று நாமும் இம் முறை வெசாக் பண்டிகையின் சமய சம்பிரதாயங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இத்தகைய அனர்த்தங்கள் மனித வரலாற்றில் ஏற்படுவது மிக அரிதானவையல்ல. புத்தபெருமான் உயிர் வாழ்ந்த காலத்தில் தம்பதிவை விஷாலா நகரம் முப்பெரும் அச்ச சூழ்நிலைகளுக்கு உட்பட்டிருந்தது. புத்த பெருமானின் போதனையின் பேரில் மேற்கொள்ளப்பட்ட பிரித் பாராயணத்தின் மூலம் அவ்வணர்த்தம் முடிவூக்கு வந்தது. பௌத்த சமயம் போதிக்கும் போதனைகளை பின்பற்றி எமக்கும் இந்த வெசாக் காலத்தில் உடல் மற்றும் ஆன்மீக ஆரோக்கியத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பது எனது நம்பிக்கையாகும்.

தற்போதைய நிலையில் அரச வெசாக் பண்டிகையை இலத்திரனியல் தொழிநுட்பத்தை பயன்படுத்தி நடத்துவதற்கு மகாசங்கத்தினரின் வழிகாட்டலும் ஆசிர்வாதமும் கிடைக்கப் பெற்றுள்ளது. எனவே வீடுகளில் இருந்து புத்த பெருமான் மீதான பக்தியூணர்வுடன் சமயக் கிரியைகளில் ஈடுபட எமக்கு முடியும்.

“தஞ்சகம்மன் கதன் சாது– யன் கத்வ நானுதபப்தி

யஸ்ஸ பதீதோசுமனோ–விபாகங் படிசெவதி”

“தீயகாரியங்களைச் செய்தவர், தாம் செய்த கர்மங்களுக்காக ஏங்குகிறார்கள். அதன் பயனைக் கண்ணீர் ததும்பும் முகத்துடன் அழுதுகொண்டே அனுபவிக்கிறார்கள். நல்ல காரியங்களைச் செய்தவர் தாம் செய்த நல்லகாரியத்திற்காக ஏங்கித் தவிப்பதில்லை அதன் பயனை இன்பமாகவும் உவகையுடனும் அனுபவிக்கிறார்கள்.” என தம்மபதத்தில் குறிப்பிடப்படுகின்றது. இந்த வெசாக் காலத்தில் புத்த பெருமான் போதித்தபடி, பின்னால் வருந்துவதற்கு காரணமாக அமைகின்ற விடயங்களை செய்யாது எமது முன்னோக்கிய பயணத்தை சிறந்ததாக அமைத்துக் கொள்ள முடியும்.

இந்த அனர்த்த சூழ்நிலையில் புத்த பெருமானின் போதனைகளை நடை முறைப்படுத்தியும் கொரோனா தடுப்பு அறிவுறைகளை பின்பற்றியும் நாட்டையும் மக்களையும் குணப்படுத்துவதற்கு உறுதிகொள்வோம். இம் முறை வெசாக் பண்டிகை இலங்கையர்களுக்கும், உலகமக்களுக்கும் நோய் நொடியில்லாத வாழ்க்கைக்கும் ஆன்மீக உயர்;வுக்கும் காரணமாக அமையட்டும் என பிரார்த்திக்கின்றேன். Nike air jordan Sneakers | Nike Dunk - Collection - Sb-roscoff