Header

Sri Lanka Army

Defender of the Nation

01st May 2020 16:23:04 Hours

தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறை வழமை போல் இடம்பெறுகின்றது கோவிட் மையம் தெரிவிப்பு

இலங்கைக்கு சொந்தமான யூஎல்- 1188 எயார் லைன்ஷ் விமானத்தில் இந்தியாவின் கல்கட்டாவிலிருந்து கடந்த ஏப்ரல் மாதம் (30) ஆம் திகதி 125 நபர்கள் இலங்கையை வந்தடைந்துள்ளனர் இவர்களை மின்னேரியவிலுள்ள பெல்வேஹர மற்றும் புனானை தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்று இம் மாதம் (1) ஆம் திகதி கோவிட் – 19 தடுப்பு செயல்பாட்டு மையத்தினால் தெரிவிக்கப்பட்டது.

மேலும் முப்படையினரால் நிர்வாகித்து வரும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களான கல்கந்த மையத்திலிருந்து (91) பேரும், டொல்பின் ஹோட்டலிலிருந்து (4) பேரும், நிபுன பூசா மையத்திலிருந்து (6) பேரும், தம்மின்னமையத்திலிருந்து (35) பேரும் 21 நாட்கள் தனிமைப்படுத்தபட்டலின் பின்பு பிசிஆர் பரிசோதனைகளின் பின்பு தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

நாடாளவியல் ரீதியாகவுள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலிருந்து இது வரைக்கும் 4805 பேர் தனிமைப் படுத்தலை நிறைவுசெய்து தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் தற்பொழுது 4565 பேர் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் தங்கியிருப்பதாக இந்த கோவிட் 19 செயற்பாட்டு மையத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலிருந்து வெளியேறிய 139 பேர்களது விபரம் கிழ்வருமாறு;

கல்கந்த தனிமைப்படுத்தப்பட்ட மையம் - 91

கடுகெலிய தனிமைப்படுத்தப்பட்ட மையம் - 03

டொல்பின் ஹோட்டல் தனிமைப்படுத்தப்பட்ட மையம் - 04

நிபுன பூசா தனிமைப்படுத்தப்பட்ட மையம் - 06

தமின்ன தனிமைப்படுத்தப்பட்ட மையம் - 35 latest Running | Nike Air Max 270