Header

Sri Lanka Army

Defender of the Nation

29th April 2020 21:32:12 Hours

கடற்படையினரது எண்ணிக்கை உயர்வு 3609 பேர் தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களில் நெப்கோ தலைவர் தெரிவிப்பு

இராஜகிரியிலுள்ள கோவிட் – 19 தடுப்பு செயற்பாட்டு மையத்தில் இன்று (29) ஆம் திகதி இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கோவிட் மையத்தின் தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா, வைத்திய சேவை பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க மற்றும் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன போன்றோர் கலந்து கொண்டனர்.

இலங்கை ஏர்லைன்ஸ் விமானத்திற்கு சொந்தமான யுஎல் -1196 மூலம். இந்தியாவின் புதுதில்லியில் இருந்து இன்று (29) மாலை 144 நபர்கள் இலங்கைக்கு வருகை தந்தனர். மேலும் முப்படையினரால் நிர்வாகித்து வரும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என்று ஊடக சந்திப்பில் இராணுவ தளபதி தெரிவித்தார்.

மேலும் 62 நபர்கள் இணுவத்தினரால் பராமரித்து வரும் கட்டுகெலியாவ தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் 49 பேரும், தியதலாவை தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலிருந்து, 5 பேரும், பூசா தடுப்பு முகாம்களில் 8 பேரும் தனிமைப்படுத்தலின் பின்பு சுகாதார சான்றிதழ்களுடன் அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இது வரைக்கும் மொத்தமாக 4659 பேர் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலிருந்து வெளியேறியுள்ளனர். அத்துடன் நாராஹென்பிட பிரதேசத்திலிருந்து நேற்று (28) ஆம் திகதி 69 பம்பைமடு தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் முப்படையினரால் நிர்வாகித்து வரும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் 3609 பேர் தற்பொழுது தங்க வைக்கப்பட்டு சுகாதார பரிசோதனைகள் ள்ளமேற்கொள்ளப்படுகின்றன.

இன்று கொரோனா தொற்று நோய்க்கு இலக்காகியுள்ள கடற்படையினர் 226 ஆக உயர்ந்துள்ளது. இதில் 147 பேர் கோவிட் தொற்று நோய்க்கு இலக்காகியுள்ளதுடன் இதில் 79 பேர் முகாமிற்கு வெளியே உள்ள போது இந்த நோய்க்கு உள்ளாகியுள்ளனர் என்று இராணுவ தளபதி வலியுறுத்தினார்.

தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் வெளியானவர்களின் எண்ணிக்கை – 4659

தற்போது தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் இருப்பவர்களது எண்ணிக்கை – 3609

தனிநபர்களின் தனிமைப்படுத்தப்பட்ட மொத்த எண்ணிக்கை – 32

கொரோனாவிற்கு இலக்காகிய கடற்படையினரது எண்ணிக்கை – 226

இதன் வீடியோ காட்சிகளை இணையதளத்தில் காணலாம் spy offers | Releases Nike Shoes