24th April 2020 22:56:06 Hours
இராஜகிரியவிலுள்ள கோவிட் – 19 தடுப்பு செயல்பாட்டு மையத்தில் (24) ஆம் திகதி இடம்பெற்ற ஊடக சந்திப்பில் சுகாதார அமைச்சர் மதிப்புக்குரிய திருமதி பவித்திரா வன்னியாரச்சி, பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா, சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க மற்றும் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோகன போன்றோர் கலந்து கொண்டனர்.
இன்று காலை (24) ஆம் திகதி புனானி தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலிருந்து சான்றிதழ்களுடன் 10 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அத்துடன் இது வரைக்கும் 4376 நபர்கள் இந்த தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலிருந்து சுகாதார பரிசோதனைகளின் பின்பு தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் நாடாளவியல் ரீதியாக 2869 பேர்கள் முப்படையினரால் நிர்வாகித்து வரும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் நேபாளத்தில் பட்டப்படிப்புக்களை நிறைவு செய்த அதிகாரி உட்பட 76 இலங்கை மாணவர்கள் இம் மாதம் 23 ஆம் திகதி கத்மண்டு விமான நிலையத்திலிருந்து யூஎல் – 1425 விமானம் மூலம் இலங்கைக்கு வருகை தந்தனர்.
வெலிசர கடற்படை சிப்பாய் ஒருவர் விடுமுறையில் சென்ற போது பொலனருவையில் வைத்து கோவிட் – 19 தொற்று நோய்க்கு உள்ளானவர் என்று கண்டறிந்ததன் நிமித்தம் வெலிசறை கடற்படை முகாமில் 30 கடற்படையினர் கண்டறியப்பட்டு அவர்களை சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டனர். மொத்தமாக 60 பேர் கொரோனா தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளரென கண்டறியப்பட்டனர்.
வெலிசறை முகாம்களில் உள்ள கடற்படையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினாரை கடற்படைத் தளபதி அவர்களது பணிப்புரையின் கீழ் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலிருந்து தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு பிசி ஆர் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. ஆகையினால் மக்கள் வீனாக பயப்படாமல் இருக்கும் படி இராணுவ தளபதி வலியுறுத்தினார். Sports brands | Women's Nike Superrep