Header

Sri Lanka Army

Defender of the Nation

21st April 2020 22:35:28 Hours

கோவிட் -19 ஐ ஒழிப்பதற்கான சவால்களை திறம்பட நிறைவேற்றுவதற்கு தளபதி ஊக்குவிப்பு

இலங்கை இராணுவமானது "கடந்த இரண்டரை தசாப்தங்களாக நாம் மோசமான நிலைகளுக்கு முகமளித்து பல சவால்களை மேற்கொண்டு கடினமான பணிகளை மேற்கொண்டு இன்று கோவிட் – 19 தடுப்பு ஒழிப்பு பணிகளில் நாம் இன்று ஈடுபட்டு வருகின்றோம் என்பதை நினைவு கொள்ளுங்கள் இதனை நாம் நாட்டின் சிறந்த நலனுக்காக அனைவரும் ஒன்றினைந்து இந்த சேவையை மேற்கொண்டு வருகின்றோம்.

மனிதாபிமான நடவடிக்கைகளின் போது நாம் ஆற்றிய சிறந்த பணிகள் நிமித்தம் இராணுவத்திற்கு மேன்மை தங்கிய ஜனாதிபதி மற்றும் நாட்டு மக்கள் அனைவராலும் பராட்டும் ,கௌரவமும் கிடைக்கப் பெற்றது நாம் அனைவரும் அறிந்த விடயமாகும். என்று இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் இராணுவ தலைமையகத்தில் உயரதிகாரிகள் மத்தியில் உரையாற்றும் போது தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலனியின் தலைமையில் இந்த கோவிட் – 19 எதிரான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இன்று இராணுவத்தினரால் மருத்துவ பராமரிப்பு, தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை அமைக்கப்பட்டு அங்கு தங்கியுள்ள நபர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து வசதிகளும் கட்டம் கட்டமாக மேற்கொண்டு வரப்படுகின்றன. ஆகையினால் இந்த தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலுள்ள நபர்களை உங்களது சகோதரங்களை போல் அல்லது உங்கள் குடும்பத்தினரைப் போல் வழிநடத்துங்கள் என்று இராணுவ தளபதி அவர்கள் இராணுவ அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார்.

மேலும் இராணுவ தளபதி கருத்து தெரிவிக்கையில் இந்தியா மற்றும் பாகிஸ்தானிலிருந்து சிக்கித் தவித்திருந்து வருகை தந்த மாணவர்களும் தற்போது தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலிற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் இந்த தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் கடற்படை மற்றும் விமானப் படையினர்களது பராமரிப்புடன் மேற்கொண்டு வரப்படுகின்றது. இந்த அர்ப்பணிப்பு பணிகளை கௌரவித்து முப்படையினர்களுக்கு இராணுவ தளபதி அவர்கள் இந்த உரையின் போது பாராட்டுக்களை தெரிவித்தார்.

பின்பு இராணுவ தளபதியவர்கள் இந்த அதிகாரிகளுடன் பணி முன்னேற்ற செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடலை மேற்கொண்டார்.

இந்த சந்திப்பில் மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயந்த செனெவிரத்ன, இராணுவ பொது நிர்வாக பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுராஜ் பங்ஷஜயா, 11 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார, 61 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பாலித பெர்ணாண்டோ, இராணுவ நடவடிக்கை பணிப்பாளர் பிரிகேடியர் ஹரேந்திர ரணசிங்க, கட்டளை தளபதிகள், கட்டளை அதிகாரிகள் இணைந்து கொண்டனர். Buy Sneakers | New Releases Nike