Header

Sri Lanka Army

Defender of the Nation

19th April 2020 23:11:08 Hours

அத்தியாவசிய சேவைகளைத் தவிர,கொழும்பு மாவட்டத்திற்குள் உள்நுழைவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்-நொப்கோ தலைவர் தெரிவிப்பு

கோவிட்-19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவர் லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் காணொளி பதிவானது இன்று 19 ஆம் திகதி மாலை ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது

“இராணுவத்தினால் நிர்வகிக்கப்பட்டு வரும் பூனானை தனிமைப்படுத்தல் மையத்தில் இருந்து பிசிஆர் பரிசோதனைகளின் பின்னர் 16 ஆம் திகதி தனிமைப்படுத்தப்பட்ட 63 நபர்கள் தங்களது வீடுகளுக்கு புறப்பட்டுச் சென்றனர்.

முப்படையினரால் நிர்வகிக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து இதுவரையில் 4143 பேர் தங்களது வீடுகளுக்கு சென்றுள்ளனர். தற்பொழுது, 1563 பேர் 19 தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இன்று, நாங்கள் மேலும்15 கோவிட்-19 தொற்று நோயாளர்களை இனங்கண்டுள்ளோம். அவர்கள் அனைவரும் கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் ஏற்கனவே தொற்றுக்குள்ளான ஒரு பெண்னுடன் நெருங்கி பழகியவர்கள்,கும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களாவர்.

ஏற்கனவே ஜனாதிபதி ஊடகப்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு,நாளை 20 ஆம் திகதியில் இருந்து சில மாவட்டங்களில் காலை 5.00தொடக்கம் மாலை 8.00 மணி வரை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும்.

கொழும்பு மாவட்டத்தில் மேலும் இரண்டு நாட்கள் ஊரடங்கு சட்டமானது அமுலில் இருக்கும் அதேவேளை, அத்தியாவசிய சேவைகளைத் தவிர,கொழும்பு மாவட்டத்திற்குள் உள்நுழைவதை மக்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்படுகிறார்கள். ஏற்கனவே ஊரங்கு சட்டம் தொடர்பாக விதிக்கப்பட்ட நேர அட்டவனை மற்றும் அத்தியாவசிய சேவை போன்வைற்றில் எதுவதமான மாற்றமும் இல்லை.

காணொளியின் முழு விபரம் பின்வருமாறு spy offers | adidas Yeezy Boost 700 , Ietp