18th April 2020 19:26:09 Hours
முப்படையினர், பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்கள உறுப்பினர்கள் ஆகியோரின் பலவிதமான சேவைகளை பாராட்டும் முகமாகவும் அவர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவிக்கும் முகமாகவும், பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன அவர்கள், கிழக்கிற்கு வெள்ளிக்கிழமை 17 ஆம் திகதி விஜயத்தை மேற்கொண்டதோடு, அங்கு சேவைபுரியும் முப்படையினர், பொலிஸார், விஷேட பொலிஸ் அதிரடி படையினர் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்கள உறுப்பினர்கள் ஆகியோரை சந்தித்து, கோவிட்-19 வைரஸ் தொற்றுக்கெதிராக பாராட்டத்தக்க மனிதாபிமான சேவைகளைச் செய்யும் படையினர், பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்கள உறுப்பினர்களுக்கு அதிமேதகு ஜனாதிபதியின் நன்றியினை தெரிவித்தார். அவசரகால தேசிய கடமைகள் காரணமாக பலரும் பாரம்பரிய புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக வீட்டிற்கு செல்ல முடியாவிட்டாலும், அவர்கள் அனைவருக்கும் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
விமானப்படைத் தளபதி ஏர் மார்ஷல் சுமங்கல டயஸ் மற்றும் தேசிய புலனாய்வு சேவையின் தலைவர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஜகத் அல்விஸ் ஆகியோருடன் இணைந்து திருகோணமலையில் உள்ள 22 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவுத் தலைமையகத்திற்கு வருகை தந்த பாதுகாப்புச் செயலாளரை, கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரசிக பெர்னாண்டோ மற்றும் 22 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் அதுல மரசிங்க ஆகியோர் வரவேற்றனர். இராணுவ சம்பிரதாயங்களைத் தொடர்ந்து, 2 ஆவது (தொண்) கஜபா படையணியின் பட்டாலியனின் படையினரால் பாதுகாப்பு செயலாளருக்கு இராணுவ மரியாதை வழங்கப்பட்டது.
பின்னர், கிழக்கு மாகாணத்தில் உள்ள முப்படையினர், பொலிஸார், விஷேட பொலிஸ் அதிரடி படையினர் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்கள உறுப்பினர்கள் ஆகியோரை பிரதிநிதித்துவப்படுத்தும் 250 இக்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் ஏனைய படையினர் மத்தியில் செயலாளர் உரையாற்றினார், அதில் அவர் பாதுகாப்புப் பணியாளர்களால் எங்கள் சமூகத்தின் இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில் கோவிட்-19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த அவர்களினால் மேற்கொண்ட பாராட்டத்தக்க பங்களிப்பினை சுட்டிக் காட்டினார். அரசு, அதிமேதகு ஜனாதிபதி மற்றும் கௌரவ பிரதமர் ஆகியோரின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதியினால் வருகை தந்ந பாதுகாப்பு செயலாளருக்கு ஒரு நினைவு சின்னம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கிழக்கு கடற்படைத் தளபதி, ரியர் அட்மிரல் ருவான் பெரேரா, சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் -கிழக்கு பகுதி ஆய்வாளர் திரு நிலந்த ஜயவர்தன, பாதுகாப்பு படைப் பிரிவுகளின் படைத் தளபதிகள், கிழக்கு முன்னரங்கு பாதுகாப்பு படைத் தளபதி, சீனக்குடா விமானப்படை அகாடமியின் கட்டளை தளபதி, மற்றும் கிழக்கு மாகாணத்தின் சிரேஷ்ட முப்படை அதிகாரிகள் கலந்து கொண்டனர். best shoes | Hats to Match Jordans Hyper Royal Bulls Hat