19th April 2020 12:47:49 Hours
‘’கோவிட்-19 வைரஸ் அச்சுறுத்தலின் அளவை நம் நாட்டில் ஓரளவிற்கு குறைப்பதற்காக, அனைவருக்கும் உதவுவதற்கு எங்கள் மரியாதை மற்றும் பாராட்டுக்கு மக்கள் தகுதியானவர்களாக காணப்படுகின்றனர் , மற்றும் குறிப்பிட்ட பகுதிகளில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் நிலைமையைத் தக்கவைத்துக் கொள்வது சம்பந்தப்பட்ட மக்களாகிய நம்முடைய பிரதான கடமையும் பொறுப்பும் ஆகும். நாட்டினை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு ஜனாதிபதியும், கௌரவ பிரதமரும் இந்த முடிவை எடுத்துள்ளார்கள். ஆகவே, நோய்த்தொற்று ஏற்படும் அபாயத்திலிருந்து விலகி இருந்து தடுப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த இந்த தளர்வான வாய்ப்பை நீங்கள் மேலும் உறுவாக்கிக் கொள்ள வேண்டும். தயவுசெய்து யாராவது வெளியே செல்ல வேண்டிய அவசியம் ஏற்படும் சந்தர்ப்பத்தில் மட்டும் பொது இடங்களில் குழுக்களாக ஒன்று சேராமல் வெளியே செல்லுங்கள். இது நாம் அனைவரும் மற்றவர்களின் சிறந்த நலன்களுக்காக நிறைவேற்ற வேண்டிய கடமையாகும், என்று பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியும் மற்றும் கோவிட் -19 எதிர்பாரா பாரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் இன்று 19 ஆம் திகதி காலை ‘ஹிரு’ ,‘தெரன’ மற்றும் அருண’ ஆகிய தொலைக்காட்சி நிழ்வுகளுக்கு வழங்கப்பட்ட நேர்காணல்களின் போது குறிப்பிட்டார்.தொலைக்காட்சி நேர்காணல்களின் காட்சிகள் கீழே இணைக்கப்பட்டுள்ளன: trace affiliate link | adidas NMD Human Race