18th April 2020 17:26:09 Hours
மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன அவர்கள் பாதுகாப்பு செயலாளராக பதவியேற்றபின்னர், வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு தனது முதலாவது விஜயத்தை வெள்ளிக்கிழமை 17 ஆம் திகதி மேற்கொண்டதோடு, 300 இற்கும் அதிகமான முப்படையினர்,பொலிஸ் அதிரடி படையினர் மற்றும் பொலிஸார் மத்தியில் உரையாற்றினார்.
தனது உரையின் போது, நாட்டில் இருந்து கோவிட்-19 தொற்றுநோயை ஒழிக்க முப்பகடையினர் மற்றும் பொலிஸாரினால் மேற்கொள்ளப்படும் அனைத்து பொறுப்புகளையும் அவர் பாராட்டினார். "இடைவிடாத முயற்சிகள் மற்றும் உங்கள் அனைவரின் அர்ப்பணிப்பு காரணமாக, நாட்டின் நிலைமை திருப்திகரமான நிலைக்கு முன்னேறியுள்ளது. நீங்கள் அனைவரும் ஊரடங்கு உத்தரவின் போது அரசாங்க அதிகாரிகளுக்கு வழங்கிய உதவி மிகவும் பாராட்டத்தக்கது, மேலும் எங்களாலும் நாட்டின் பொது மக்களாலும் பாராட்டத்தக்கது, ”என்று அவர் கூட்டத்தில் கூறினார்.
வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் மேஜர் ஜெனரல் (ஓய்வு) குணரத்ன அவர்களுக்கு சம்பிரதாய முறைப்படி இராணுவ பொலிஸ் மரியாதையளிக்கப்பட்டு வரவேற்கப்பட்டார். அதன் பின்னர் வன்னி பாதுகாப்பு படையின் தளபதி மேஜர் ஜெனரல் ரோஹித தர்மசிரி அவர்களால் பிரதம அதிதியவர்கள் பாதுகாப்பு படைத்தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அன்றைய பிரதம அதிதியவர்கள் 2009 ஆம் ஆண்டில் இடம்பெற்ற தனது நினைவுகளில் சிலவற்றை நினைவு கூர்ந்தார், மேலும் அவர் வன்னிப் பாதுகாப்பு படைத் தளபதி மற்றும் அவர் வன்னி பகுதியில் மறுவாழ்வுக்கான தகுதிவாய்ந்த அதிகாரியாக முத்தரப்புப் படைகளின் உதவியுடன் நிறைவேற்றிய பணிகள் ஆகியவற்றை நினைவு கூர்ந்தார். ஏற்கனவே மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன அவர்கள் யாழ் குடாநாட்டில் உள்ள படையினர் மற்றும் பொலிஸார் மத்தியில் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. ( பிரிதான கதையை வேறு இடத்தில் பார்க்க)
இலங்கை விமானப்படைத் தளபதி, தேசிய புலனாய்வுத் துறை தலைவர், வன்னி பாதுகாப்புப் படைத் தளபதி, 21, 54, 56, 62 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவுகளின் படைத் தளபதிகள், வடமத்திய முன்னரங்கு பாதுகாப்பு படைத் தளபதி , இலங்கை கடற்படையின் வடமேற்கு, வட மத்திய தலைமையக தளபதிகள், இலங்கை விமானப்படையின் வவுனியா, அனுராதபுரத்தின் பிரதேச தள தளபதிகள் மற்றும் அனுராதபுரத்தில் உள்ள வட மத்திய மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர், மற்றும் அனுராதபுர மற்றும் வவுனியா மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் – வவுனியா விஷேட பொலிஸ் அதிரடி படை பாதுகாப்பு படை தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் – வன்னி , வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளையின் கீழ் உள்ள கட்டளைத தளபதிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் முப்படையிர் மற்றும் பொலிஸார் உட்பட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்..
இதற்கிடையில், பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தனது வடக்கிற்கான விஜயத்தின் போது, வெள்ளிக்கிழமை (17) முல்லைத்தீவில் உள்ள பாதுகாப்பு படை தலைமையகத்திற்கு சென்றதோடு, அங்குள்ள படையினரின் அயராத அர்ப்பணிபை பாராட்டினார்.
வருகை தந்த பாதுகாப்பு செயலாளரை முல்லைத்தீவு பாதுகாப்பு படையின் தளபதி மேஜர் ஜெனரல் டீப்தி ஜயதிலக அவர்கள் வரவேற்றார்.
கோவிட் -19 தொற்றுநோயை தாய்நாட்டிலிருந்து ஒழிக்க இராணுவம், கடற்படை, விமானப்படை, பொலிஸார், விஷேட பொலிஸ் அதிரடி படையினர் மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்களம் ஆகியவற்றினால் மேற்கொண்ட அர்பணிப்பான சேவைகள் குறித்து அவர் பேசினார்.
இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுமங்கல டயஸ், முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் டீப்தி ஜயதிலக்க , 59, 64 மற்றும் 68 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவுகளின் படைத் தளபதிகள், முல்லைத்தீவு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர், சிரேஷ்ட கடற்படை, விமானப்படை, விஷேடபொலிஸ் அதிரடிப் படை மற்றும் பொலிஸ் அதிகாரிகள், சிரேஷ்ட முப்படை அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் படைவீரர்கள் உட்பட பலர் பாதுகாப்பு செயலாளரின் உரையில் கலந்து கொண்டனர்.Running sports | Air Jordan 1 Retro High OG "UNC Patent Leather" Obsidian/Blue Chill-White UK