Header

Sri Lanka Army

Defender of the Nation

18th April 2020 12:39:06 Hours

நொப்கோவில் இடம்பெற்ற சந்திப்பில் கோவிட் தொடர்பான மூலோபாயங்கள் பற்றி ஆராய்வு

புத்தாண்டுக்குப் பின்னர் கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் 1 ஆவது குழு கூட்டம் இன்று 17 ஆம் திகதி ராஜகிரியவில் அமைந்துள்ள நொப்கோ மையத்தில் இடம்பெற்றது.

இந்த கூட்டமானது, கௌரவ சுகாதார அமைச்சர் திருமதி பவித்ரா வன்னிஆராச்ச்சி, பாதுகாப்புத் தலைமைப் பிரதானியும் இராணுவத் தளபதியும் மற்றும் கோவிட் எதிர்பாரா பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமும் மருத்துவ நிபுணருமான வைத்தியர் அனில் ஜாசிங்க ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலானது,பொது மக்களிக் அன்றாட சிவில் வாழ்க்கையினை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கான ஒரு மூலோபாயத்தை வகுப்பதற்கான விவாதங்கள், பெரும்பாலும் விஞ்ஞான மற்றும் நடைமுறை அடிப்படையில் மற்றும் நிலைமை குறித்த குறிப்பிட்ட துறைகளில் அந்தந்த நிபுணர்களிடமிருந்து விஞ்ஞானரீதியிலான புதிய தரவுகளைப் பெறுதல், எதிர்கால நடவடிக்கைகளுக்கான முன்கணிப்பு மூலோபாயம் மற்றும் எதிர்காலத்தில் கோவிட்-19 வைரஸ் பரவலின் கட்டுப்படுத்தலுக்கான புதிய அணுகுமுறைகள் போன்றவற்றினை அடிப்படையாக்க் கொண்டு இடம்பெற்றது.

படிப்படியான முறையில் சமுதாயத்தையும் பொருளாதார விவகாரங்களையும் இயல்பாக்குவதற்கு தற்போதைய முன்னேற்றங்கள் எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பதை விளக்கமளிக்கும் வகையில், இலங்கையின் சமூக மருத்துவர்கள் கல்லூரியின் மருத்துவ வல்லுநர்கள் (சி.சி.பி.எஸ்.எல்) தொற்றுநோயின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய ஒரு விரிவான விளக்கக்காட்சியை சமர்ப்பித்தனர்,

அரசாங்க மருத்துவ அலுவலர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளும் இதே கருத்துக்களில் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தினர் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் நடத்தப்படும் பி.சி.ஆர் சோதனைகளை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக் காட்டினர், ஏனெனில் இது மிகவும் உற்பத்தி மற்றும் நிரூபிக்கப்பட்ட நுட்பமாகும்.

பிரசித்திபெற்ற நொத்தரசு சட்டத்தரணி பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன கலந்துரையாடலின் போது, தற்போது நிலவும் தொற்றுநோயின் சட்ட அம்சங்களையும், சமூகத்தின் மேலும் முன்னேற்றத்திற்கான சட்டரீதியான தாக்கங்களாக என்ன பின்பற்றப்படும் என்பதையும் சுட்டிக்காட்டினார். ஊரடங்கு உத்தரவு மீறல் மற்றும் ஊரடங்கு உத்தரவு மற்றும் விதிமுறைகளை மீறியதற்காக சிறையில் வைக்கப்பட்டுள்ள நனபர்கள் மற்றும் வாகனங்கள் குறித்து நிலைமையை அவர் விளக்கினார்.

இந்த கலந்துரையாடலின் முடிவுகளானது, ஜனாதிபதிச் செயலகத்தில் இறுதிச் செயலாக்கத்திற்காக மேற்கொள்ளப்படும் பணிக்குழு கூட்டங்களின் போது விவாதங்களுக்கு மேலும் எடுத்துக் கொள்ளப்படும் என கூட்டத்தில் குறிப்பிடப்பட்டது.Authentic Sneakers | Footwear